துலாம் முதல் மீனம் வரை ராசிப்பலன் ..! 

துலாம் ராசி நேயர்களே..!

வரவு திருப்திகரமாக இருக்கும்.எந்த காரியத்தையும் எளிதில் முடிப்பீர்கள்.வெளி  நாட்டிலிருந்து உங்களுக்கு நல்ல வாய்ப்பு வரலாம்

விருச்சிக ராசி நேயர்களே..!

பயணம் மேற்கொள்வதால் நல்ல பலன் கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களிடமிருந்து ஒத்துழைப்பு உண்டு. தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் வரும்.

தனுசு ராசி நேயர்களே...!

அரசியல்வாதிகள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். நண்பர்கள் சிலர் இன்று உங்களுக்கு சில குழப்பங்களை ஏற்படுத்தி விடுவார்கள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து பேசுவார்கள்.

 மகர ராசி நேயர்களே...!

உங்கள் முன்னேற்றத்தை கண்டு உறவினர்கள் ஆதங்கப்படும் நாள் இது. கனிவான பேச்சால் அனைவரையும் கவரக்கூடிய திறமை பெற்றவர்கள். நீங்கள் உங்கள் வீட்டை சுத்தம் செய்து சீரமைத்துக் கொள்ள முயற்சி மேற்கொள்வீர்கள்.

கும்ப ராசி நேயர்களே...!

தொடர்ந்து உங்களுக்கு யோகங்கள் வர வாய்ப்பு உள்ளது. யாரிடமும் பகையாய் பேச வேண்டாம்.நண்பர்கள் தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பார்கள்.

மீனராசி நேயர்களே...!

மனக்கலக்கம் அடிக்கடி ஏற்படும். திடீரென பயணங்கள் செய்ய நேரிடலாம். வங்கிகளில் உள்ள வைப்பு நிதி கொஞ்சம் கொஞ்சமாக குறைய வாய்ப்பு உண்டு. விஐபிகளின் வருகையால் சில பிரச்சினைகள் உருவாகும்.