துலாம் முதல் மீனம் வரை ராசிப்பலன்...! 

துலாம் ராசி நேயர்களே..!

திடீர் பயணத்தால் திசை திருப்பம் ஏற்பட வாய்ப்பு உண்டு. பக்குவமாக பேசி காரியங்களை சாதித்துக் கொள்ள வேண்டிய நாள் இது. குடும்பத்தில் அமைதி அதிகரிக்க விட்டு கொடுத்து செல்வது நல்லது.

விருச்சிக ராசி நேயர்களே...! 

எந்தக் காரியத்தை எடுத்தாலும் மிக எளிதில் நிறைவேறும். புகழ் மிக்கவர்கள் சந்திப்பு உங்களுக்கு கிடைக்கும். தொலைபேசி வழியில் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். உங்கள் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்து கொள்வீர்கள்.

தனுசு ராசி நேயர்களே...!

புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள் இது. புகழ் மிக்கவர்கள் சந்திப்பு உங்களுக்கு கிடைக்கும். விருந்தினர் வருகையால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். தொழில் கூட்டாளிகளால் சில குழப்பங்கள் ஏற்பட்டு பின்னர் நீங்கும்.

மகர ராசி நேயர்களே...!

அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். வெளிநாடு தொடர்பு உங்களுக்கு அனுகூலமாக அமையும். 

கும்ப ராசி நேயர்களே...!

இன்று யோசித்து செயல்பட வேண்டிய நாள் இது. வேலை சுமை அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ள திட்டமிடுவீர்கள். பணப் பற்றாக்குறை ஏற்பட்டாலும் அதை சாமர்த்தியமாக சமாளித்து கொள்வீர்கள். 

மீனராசி நேயர்களே...!

வாழ்க்கை தரம் உயர பாடுபடுவீர்கள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்களில் நீங்கள் கையெழுத்திட வேண்டிய நிலை ஏற்படலாம். எளிதில் பல காரியங்களை செய்து முடிக்க கூடிய திறமை உங்களுக்கு கிடைக்கும்.