துலாம் முதல் மீனம் வரை ராசிப்பலன்...!

துலாம் ராசி நேயர்களே...!

ஆசைகள் நிறைவேற கூடிய நாள் இது. அலைச்சலுக்கேற்ற ஆதாயம் உங்களுக்கு கிடைக்காது. எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து முடிவு செய்வது நல்லது.

விருச்சிக ராசி நேயர்களே...!

உங்களது முன்னேற்றம் அதிகரிக்க முன்னோர்களை வழிபட வேண்டியது மிகவும் சிறந்தது. வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் பயணத்தால் உங்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்.

தனுசு ராசி நேயர்களே...!

சொல்லும் சொற்கள் அனைத்தும் நல்லவையாக இருக்க வேண்டும். உங்களுக்கு பிடித்தவர்களுடன் பேசி மகிழ்வீர்கள். தனலாபம் எதிர்பார்த்த அளவிற்கு இருக்கும். பூர்வீக சொத்துக்களை விற்று அதில் இருந்து கிடைக்கக்கூடிய பணத்தை வைத்து நல்ல ஒரு முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

மகர ராசி நேயர்களே...!.

தன்னம்பிக்கை உங்களுக்கு இன்று அதிகரிக்கும். உங்களை சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் உங்களை தேடி வருவார்கள். திருமணப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும் நாள் இது.

கும்ப ராசி நேயர்களே..!

கனவுகள் நனவாகும். கடமையிலிருந்து தொய்வு அகலும். பிள்ளைகளிடம் பக்குவமாக பேசி பழகுவது நல்லது. சொத்துகளில் இருந்துவந்த வில்லங்கம் நீங்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மீனராசி நேயர்களே...!

எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். உறவினர்கள் வழியில் ஏற்பட்ட தகராறு நீங்கும். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் கருதி எடுத்த முடிவு வெற்றி பெறும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.