துலாம் முதல் மீனம் வரை ராசிபலன்..!  

துலாம் ராசி நேயர்களே...!

உங்களுடைய இனிய பேச்சால் எதிரிகளை வெல்லும் நாள் இது. இழுபறியாக இருந்து வந்த பல காரியங்கள் இனிதே நடைபெறும். செய்யும் தொழில் சிறப்பாக நடைபெறும் நாள் இது. பொருளாதார நிலையில் உள்ள நெருக்கடிகள் அகலும்.

விருச்சக ராசி நேயர்களே...!

உங்களுடைய பொருளாதாரம் உயரும்.செல்லுமிடங்களிலெல்லாம் உங்களைப் பற்றிய சிறப்பாக பேசப்படுவீர்கள்.தொலை தூர பயணங்கள் திடீரென ஏற்படலாம். பொதுநலத்தில் இருப்பவர்கள் அதிக சேவையில் ஈடுபடுவீர்கள்.

தனுசு ராசி நேயர்களே...!
 
உங்களை விட்டு விலகிச் சென்றவர்கள் உங்களை வந்து அடைவார்கள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிகள் உங்களுக்கு வெற்றி கிட்டும். திருமணப் பேச்சுகள் இன்று அடிபடும்.

மகர ராசி நேயர்களே..!.
உடன்பிறப்புகள் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். இதுவரை வராமலிருந்த பணம் உங்களைத் தேடிவரும். பக்கபலமாக இருப்பவர்கள் உங்கள் உடன் ஆதரவாக இருப்பார்கள்.

கும்ப ராசி நேயர்களே...!

நினைத்த காரியம் இனிதே நிறைவேறும். நிம்மதியாக கோவிலுக்கு சென்று வருவது நல்லது. நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். ஆக்கபூர்வமான சில விஷயங்களை பற்றி சிந்தித்து செயல்படுவீர்கள்.

மீனராசி நேயர்களே..!

வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி வரும் நாள் இது. சில காரியங்களை எளிதில் முடிக்க சிந்திப்பீர்கள். பெற்றோர் நலனில் அதிக அக்கறை காட்டுவது நல்லது.