Asianet News TamilAsianet News Tamil

Thirilling places: நீங்கள் திகில் பயணம் செல்ல தயாரா?இந்தியாவில் அமானுஷ்யங்கள் நிறைந்த அழகிய 6 சுற்றுலாதளங்கள்!

இந்தியாவில் அமானுஷ்யங்கள் நிறைந்த அழகிய 6 சுற்றுலாதளங்கள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள பதிவினை படிக்கவும்.

Thrilling places to visit in India
Author
Chennai, First Published Jan 20, 2022, 2:36 PM IST

காலம் எவ்வளவு மாறினாலும், அமானுஷ்யம் விஷயங்கள் என்றால் இன்றளவும் நம்மில் பெரும்பாலானோர் மனதிலும் பயம் இருக்கும். அமானுஷ்யம், தொடர்பான விஷயங்களை நம்புவது இன்றளவும் தொடர்கிறது. அமானுஷ்யம் என்றவுடன், சிறு வயதில் இருந்தே, கேட்ட கதைகள், பார்த்த திகிலூட்டும் படங்கள் நம் கண் முன்னே வந்து செல்லும். அதிலும் குறிப்பாக இரவு நேரங்களில் பேய் படங்கள் பார்த்தால், சொல்லவே வேண்டாம். சிலர் அன்று இரவு முழுவதும் தூங்கவே மாட்டார்கள். சினிமாவில் வரும் பேய்க்கு இவ்வளவு பயன் என்றால், அந்த பேய் தொடர்பான இடங்களை நேரில் பார்த்தால் எப்படி இருக்கும். இந்தியாவில் பல இடங்கள் பேய் இருப்பதாக கருதப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன. 

Thrilling places to visit in India

அந்த குறிப்பிட்ட இடங்களை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள பதிவினை படிக்கவும்.

இருண்ட மணல் கடற்கரை:

இந்த கடற்கரை கருப்பு மணலுக்கும், அமானுஷ்ய நடவடிக்கைகளுக்கும் பிரபலமானது. இந்த இடத்திற்கு சென்ற பலர், காணாமல் போயுள்ளனர் என கதைகள் கூறப்படுகிறது. முன்னதாக இந்த இடம் இந்து தகன களமாக பயன்படுத்தப்பட்டது எனவும், மக்கள் பலர் இந்த இடத்தில் அமானுஷ்ய குரல்களைக் கேட்டதாகவும், இயற்கைக்கு மாறான சில செயல்களைக் கண்டதாகவும் கூறுகிறார்கள்.

ராஜஸ்தானின் பங்கர் கோட்டை:  

இது ஆல்வார் மாவட்டத்தில் சரிஸ்கா புலி ரிசர்வ் எல்லையில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் மிகவும் பிரபலமான பேய் நகரங்களில் ஒன்றாகும். இந்த இடத்திற்கு ஒரு வரலாறு உண்டு. இளவரசி ரத்னாவதியை ஒரு மந்திரவாதி காதலித்து அடைய விரும்பியுள்ளார். ஆனால், இளவரசி மந்திரவாதியை ஏமாற்றி,  அவருடைய மந்திரத்தை அவருக்கே திரும்பியுள்ளார். இதனால், கோபம் அடைந்த மந்திரவாதி தனது இறப்புக்கு முன், அரண்மனையின் மீது ஒரு இருண்ட மந்திரத்தை எழுதினார். அது அந்த அரண்மனையின் அழிவை ஏற்படுத்தியது எனவும் கூறப்படுகிறது. எனினும், இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

லம்பி தேஹார் சுரங்கங்கள்:

உத்தரகண்ட் மாநிலத்தில் முசோரி என்கிற இடத்தில் இந்த லம்பி தேஹார் சுரங்கங்கள் உள்ளன. இங்கு சுண்ணாம்பு அதிகம் கிடைத்து வந்தது. ஆனால், இந்த பகுதியில் பல்வேறு விபத்துகள் நடந்ததால் தற்போது இது செயல்படாமல் உள்ளது. இங்கு ஏராளமான உயிரிழப்புகள் மர்ம மரணமாக நிகழ்ந்துள்ளன.

டவ் ஹில்:

மேற்கு வங்கத்தில் உள்ள குர்சியோங் பகுதியில் விட்டோரியா ஆண்கள் உயர்நிலை பள்ளியும், டவ்ஹில் பெண்கள் பள்ளியும் உள்ளது. இந்த பகுதியில் பல அமானுஷ்யங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் இதற்கு அருகில் உள்ள காட்டு பகுதியில் நிறைய பிணங்களின் உடல்களை கண்டெடுத்தால் இப்படி மக்கள் கருதி வருகின்றனர்.

ஹைதராபாத்தில் ரவீந்திர நகர்:  

இங்கிருந்த தேவியின் கோயில் இடிக்கப்பட்டதால் இந்த அசம்பாவிதங்கள் நடந்திருப்பதாகவும், இவ்வாறான பிரச்சனைகள் இன்றும் தொடர்ந்து நடைப்பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, 2012-ஆம் ஆண்டில் தொடர்ச்சியான தற்கொலைகள் நடந்த பின்னர் ஹைதராபாத்தில் உள்ள இந்த இடம் பல குடும்பங்களால், தனித்து விடப்பட்டது.

Thrilling places to visit in India

டிசோசா சால்:

மும்மையில் மாஹிம் என்கிற பகுதியில் டிசோசா சால் உள்ளது. அங்குள்ள ஆழமான கிணற்றில் இருந்து தண்ணீர் நிரப்பும் போது பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் நம்புகின்றனர். அந்த பெண்மணி ஒவ்வொரு இரவும் அங்கு சுற்றியுள்ள பகுதியில் அலைந்து வேட்டையாடுவதாக பலர் கூறுகிறார்கள். மேலும் பலர் வெள்ளை நிற தோற்றத்தைப் பார்த்ததாகக் கூறுகின்றனர்.

மேற்சொன்ன இடங்களை, போல ஏராளமான இடங்கள் இந்தியாவில் உள்ளன. வாய்ப்பு கிடைத்தால், நேரில் சென்று பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!


 

Follow Us:
Download App:
  • android
  • ios