சுயஇன்பம்.. அதை செய்வதற்கு முன்னும், பின்னும் இதெல்லாம் கவனிக்கணுமாம் - பெண்களே படித்து தெரிந்துகொள்ளுங்கள்!
சுயஇன்பம் என்பது ஆண்களுக்கும், பெண்களுக்கும் இயல்பான ஒன்றுதான். குறிப்பாக பெண்கள் சுயஇன்பத்தில் ஈடுபடுவதன் மூலம் அவர்கள் தங்கள் உடல் மற்றும் மன நலத்தை பெரிய அளவில் பாதுகாக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.
சுயஇன்பத்தால் ஏற்படும் நல்லவை பற்றி பல பதிவுகளில் பார்த்திக்கிறோம், ஆனால் அதில் ஈடுபடுவதற்கு முன்னும், பின்னும் என்ன செய்யவேண்டும் என்பதை இந்த பதிவில் தெளிவாக காணலாம். குறிப்பாக இந்த பதிவில் பெண்கள், தாங்கள் சுயஇன்பம் மேற்கொள்ளும் முன்னும், பின்னும் என்ன செய்யவேண்டும் என்பதை பார்க்கலாம்.
கைகளை சரியாக சுத்தம் செய்ய வேண்டும்
உங்கள் கைகள் பல்வேறு பாக்டீரியாக்கள், வைரஸ்கள், தூசி மற்றும் அழுக்குகளை கொண்டிருக்கும். ஆகவே பெண்கள் சுயஇன்பத்திற்கு முன், தங்கள் பெண்ணுறுப்புக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகள் நுழைவதைத் தடுக்க உங்கள் கைகளை சுத்தம் செய்வதை உறுதிசெய்து, தொற்று அபாயத்தைக் குறைக்கவும். அதே போல சுயஇன்பத்திற்குப் பிறகு உங்கள் கைகளை சுத்தம் செய்வதும் அவசியம்.
நகம் தூய்மையாக இருக்க வேண்டும்
பல பெண்களுக்கு, கைகள் மற்றும் விரல்கள் சுயஇன்பத்திற்கான பொதுவான கருவிகள் ஆகும். எனவே, கைகளைக் கழுவுவது மட்டும் போதாது, பெண்கள் நகங்களை சுத்தமாக பராமரிப்பதும் முக்கியம். நீளமான, அழகான நகங்கள் கவர்ச்சிகரமானதாக இருந்தாலும், அவை கிருமிகள் சிறந்த இடமாக மாறுகின்றன. யோனி தோல் மென்மையானது, எனவே சுயஇன்பத்தின் போது நீண்ட நகங்களைப் பயன்படுத்துவது வெட்டுக்காயங்களுக்கு வழிவகுக்கும்.
செக்ஸ் டாய்ஸ்
உங்கள் சுயஇன்பத்திற்கு சரியான செக்ஸ் பொம்மையைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். முறையாக செக்ஸ் டாய் எது என்று ஆராய்ச்சி செய்து பெறுவதில் தவறில்லை, தேவைப்பட்டால், நல்ல வழிகாட்டுதலுக்காக உங்கள் மகளிர் மருத்துவ நிபுணரை அணுகவும் தயங்கவேண்டாம். செக்ஸ் டாய்ஸ்களில் உள்ள லேடக்ஸ் மற்றும் பிளாஸ்டிக் போன்ற பொருட்கள் தூசி, அழுக்கு மற்றும் பாக்டீரியாக்களை எளிதில் கவரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே,தொற்றுநோய்களைத் தடுக்க ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் முன் அவற்றை நன்கு சுத்தம் செய்வது அவசியம்.