குழந்தைகளின் பண்பு நலன்கள் மட்டுமன்றி நாளை வாழப்போகும் சமூகத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் எனவும் கற்பிக்க வேண்டும்.

குழந்தைகள் அறியாத மற்ற நபர்களிடம் நடந்து கொள்ளும் முறை, புதிதாய் ஒருவரை சந்திக்கும் போதோ அல்லது பழகியவருடனோ உரையாடுதல் நல்லவர் யார்? கெட்டவர் யார்? என பிரித்துப் பார்க்க உதவும் விஷயங்களே, சமூக பண்புகள் சிறு விஷயத்தில் தொடங்கி..! குழந்தைகள் சக தோழர்களுக்கு அல்லது தெரிந்தவர்களை சந்திக்கும் ஹாய், ஹலோ, வணக்கம் கூறி, விடைபெற்றுச் செல்லும்போது நன்றி கூறுவது மற்றும் ஏதேனும் தவறு இழைத்திருந்தால் மன்னிப்பு கோருவது வரை அனைத்தும் வாழ்வில் மாற்றங்களை உண்டாக்கும். 

இந்த அடிப்படை பண்புகள் அறிந்தவர்கள் தான் அனைவராலும் போற்றி மதிக்கப்படுவர்.

மேலும் எந்தெந்த சொல்நிலைகளில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் குழந்தைகள் கற்பர்.

முக்கிய விஷயங்கள்!

ஒருவர் பேசும் பொழுது நன்கு உள்வாங்கி, தக்க சமயத்தில் பதில் அளித்தல், குறிப்பிட்ட சூழ்நிலைகளில் நடந்து கொள்ளும் முறை, நண்பர்களை உருவாக்கிக்கொள்ளுதல், நட்பை பாதுகாத்துக்கொள்வது உள்ளிட்டவற்றை கற்பிக்க வேண்டும்.

இந்த சமூக பண்புகளை வளர்த்துக்கொள்வது அறிவு மற்றும் புத்திகூர்மையை அதிகரிக்க உதவும். குழந்தைகள் சுற்றுப்புறத்தையும், மனிதர்களையும் புரிந்து நடந்து கொள்ள பழகி விட்டால், எளிதில் எதையும் கற்று தெளிவு பெற்று விட முடியும்.

எப்படி அறிவது?

குழந்தைகள் விஷயங்களை கற்று கொள்கின்றனரா? விஷயம் மனதில் பதிந்துள்ளதா என்பதை அவர்களின் நடத்தையே விளக்கிவிடும் குழந்தைகள் தயங்கி, சோம்பேறித் தனத்துடன் இருந்தால் பிரச்சனை உள்ளது

முக்கிய அறிகுறிகள்..!

பேசும் பொழுது தெளிவின்மை, மறதி, நீங்கள் என்ன சொன்னீர்களோ அதை மட்டும் செய்வது, சொல்வதை புரிந்து கொள்ளாமல் இருப்பது அல்லது புரிந்து கொள்வதில் கடினம் போன்றவற்றால் குழந்தைகளின் சமூக பண்பு நலன்கள் குறித்த கற்றல் வெளிப்படும்

பெற்றோர் செய்ய வேண்டியது! 

குழந்தைகளை அடித்து, கண்டித்து கற்று கொடுக்காமல், நிலையை எப்படி மேம்படுத்துவது என யோசிக்கவேண்டும்.

குழந்தைக்கு வாயால் சொன்னால் புரியவில்லை எனில், படங்கள் காணொளி, நடைமுறை விஷயங்கள் மூலமாக எடுத்துக்கூறலாம்.

முயன்றால் முடியும்!

குழந்தைகளின் விருப்பு - வெறுப்புகளை அறிந்து நடக்க வேண்டும். எதையும் அவர்களுக்கு பிடித்த பாணியில் செய்யவேண்டும். குழந்தைகளுக்கு எப்படிச் சொன்னால் புரியும் என அறிந்து செயல்பட்டு அவர்களின் திறன்கள், சமூகப் பண்புகளை உயர்த்த வேண்டும்