பரிசு பொருட்கள் ஒருவரை வாழ்த்துவதற்கு.. அல்லது மகிழ்ச்சியான தருணங்களை மேலும் மகிழ்ச்சியாக மாற்றுவதற்கு, என பல உதாரனத்தோடு நண்பர்களுக்கும், குடும்ப உறவினர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் கொடுக்கப்படுகிறது. 

வாஸ்து:

ஆனால் வாஸ்து சாஸ்த்திரத்தின் படி சில பொருட்களை பரிசாக கொடுக்க கூடாது என்றும் சில வற்றைப் பரிசாகப் பெறக்கூடாது என்றும் கூறப்படுகிறது. அப்படி எந்த பொருள் வாங்கவும், கொடுக்கவும் கூடாது என்பதை பார்ப்போம்.

யானை பொம்மை:

ஒற்றையாக இருக்கும் யானை பொம்மை பரிசாகத் தரக்கூடாது. மாறாக ஜோடியாக உள்ள யானை பொம்மைகள் பரிசாக தரலாம். வசதி படைத்தவர்கள் வெள்ளி, தங்கமுலாம் பூசப்பட்ட யானை பொம்மைகள் கூட கொடுப்பது சிறப்பு. சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள் வெண்கலம் அல்லது மரத்தால் செய்யப்பட்ட பொம்மைகளை கூட பரிசாக தரலாம்.

துண்டு மற்றும் கைக்குட்டை:

நண்பர்கள் சிலர் தங்களுடைய கைக்குட்டைகளை மாற்றிக்கொள்வதும் பரிசாக வழங்குவதும் சகஜம்தான். ஆனால் இப்படி துண்டு மற்றும் கைக்குட்டைகளை மாற்றிக்கொள்வது கொடுப்பவர் மற்றும் வாங்குபவர் இருவருக்குமே தீமை உண்டாக்கும் என கூறுகிறது வாஸ்து சாஸ்திரம்.

கடிகாரம்:

பலருக்கு பரிசாக வரும் பொருட்களில் ஒன்று கைகடிகாரம், மற்றும் வீட்டில் மாட்டி வைக்கப்படும் அழகு கடிகாரங்கள். ஆனால் இப்படி கடிகாரத்தை பரிசாகக் கொடுப்பது எதிர்மரையானதாம். வாழ்நாளை குறைப்பதாக கூட அமைய வாய்ப்புள்ளதாம்.

கூர்மையான ஆயுதங்கள்:

கத்தி போன்ற கூர்மையான ஆயுதங்களை பொதுவாக பலருக்கும் பரிசளிக்கும் பழக்கம் இல்லை . இருப்பினும் இனி யாரவது கேட்டல் கூட இதனை பரிசாக தராதீர்கள் இது கொடுப்பவர், வாங்குபவர் என இருவருக்குமே கெடுதலை உண்டாகும் என கூறுகிறது வாஸ்து சாஸ்திரம்.

மண்ணால் செய்த பொருட்கள்:

நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என இயற்கையோடு ஒன்றிய பொருட்களை வைத்து செய்யப்படும் மண்ணால் செய்த பொருள்களை பரிசாக கொடுப்பது மிகவும் சிறந்தது. இதனை கொடுப்பதால் செல்வம் அதிகரிக்குமாம்.

காலணிகள்:

தற்போதைய மாடர்ன் மங்கையர் அதிகம் விரும்பும் பொருட்களில் ஒன்று காலணிகள். இதனால் இப்படிப் பட்ட பொருட்கள் அவர்களுக்கு பரிசாக கொடுக்கப்படுகிறது. இப்படி காலணிகளை பரிசாக கொடுப்பது மகிழ்ச்சியின்மையை உண்டாகும் என்றும் கூறப்படுகிறது.

வேலை சம்மந்தமான பொருட்கள்:

நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்களோ அதே துறையை சேர்ந்த நண்பர் உங்களுக்கு இருந்தால் வேளைக்கு உதவியாக இருக்கும் என நீங்கள் ஒரு சில பொருட்களை அவர்களுக்கு பரிசளிக்க வாய்ப்புள்ளது அப்படி கொடுப்பது நல்லது இல்லையாம். 

வெள்ளி:

வெள்ளி பொருட்களை பரிசாக கொடுப்பது மிகவும் சிறந்தது என்றும் இப்படி வெள்ளிப் பொருட்களை பரிசாக கொடுப்பதால் செல்வத்தை பெருக்கும் என்கிறது சாஸ்திரம்.

தண்ணீர் சம்மந்தப்பட்ட பொருள்:

மீன் தொட்டி போன்ற தண்ணீர் நிரப்பி வைக்கப்படும் பொருட்களை பரிசாக தருவது நமது அதிர்ஷ்டத்தை மற்றவருக்கு தருவது போன்றதாக அமையும். அதனால் மீன் தொட்டிகள் யாருக்கும் பரிசாக கொடுக்கக்கூடாதாம்.