சிறப்பு வாய்ந்த இன்றைய தினத்தில் வரலக்ஷ்மி நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. இதற்காக பெண்கள் இன்றைய தினத்தில் அவர்களது வீட்டில் உள்ள லக்ஷ்மி படத்திற்கு மிக சிறப்பாக அலங்கரித்து வர லக்ஷ்மி நோன்பு மேற்கொண்டு உள்ளனர்.

சிறப்பு வாய்ந்த இன்றைய தினத்தில் வரலக்ஷ்மி நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. இதற்காக பெண்கள் இன்றைய தினத்தில் அவர்களது வீட்டில் உள்ள லக்ஷ்மி படத்திற்கு மிக சிறப்பாக அலங்கரித்து நோன்பு மேற்கொண்டு உள்ளனர்.

அவ்வாறு மேற்கொள்ளப்படும் வரலக்ஷ்மி நோன்பிற்கு, எப்படியெல்லாம் பூஜை செய்ய வேண்டும்..? அதன் சிறப்சங்கள் என்ன...? இன்றைய தினத்தில் வைக்கக்கூடிய வேண்டுகோள் என்ன..? எப்படி பூஜிக்க வேண்டும் என்பதை பார்க்கலாம். 

வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமி படத்தை அலங்கரிக்கவும். பழங்கள் வைத்து வழிபட வேண்டும். பெண்கள், தங்கள் திருமணத்தை அடுத்து வரும் வரலட்சுமி பூஜை யிலிருந்து இதை ஒவ்வொரு வருடமும் செய்ய வேண்டும். இது தான் சிறப்பு. பூஜை முடிந்த உடன் மறுநாள் அம்மனுக்கு ஆரத்தி எடுத்த பின்னர் கலசத்தை அரிசி வைத்திருக்கும் பானையில் வைக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

பூஜை செய்யும் முறை

வரலக்ஷ்மி பூஜையை செய்யும் போது, பூஜை மண்டபம் ஏற்பாடு செய்ய வேண்டும் வீட்டின் தென் கிழக்கு மூலையில் மண்டபம் அமைக்க வேண்டும்.

குருத்து வாழை மரங்களைக் கட்டி மாவிலைத் தோரணம் தொங்கவிட வேண்டும். மஞ்சள் கயிறு, பூஜைக்கு வேண்டிய பொருட்கள் அனைத்தும் வைத்துக்கொள்ள வேண்டும். பூஜை செய்யும் பெண்கள் காரம், புளி சேரக் சேராத உணவை இரவே உண்டு, இன்று காலை முதல் விரதம் இருக்க வேண்டும். பூஜையின் போது பாட்டு பாட தெரிந்தவர்கள் பாடலை பாடிக்கொண்டே அம்மனுக்கு விரதம் இருக்கலாம். அல்லது வரலக்ஷ்மிக்கு உகந்த பக்தி பாடலை ஒலிக்க செய்து பூஜை செய்யலாம்.