Asianet News TamilAsianet News Tamil

ஓஹோ.... ஹுவாங் நகரில் இவ்வளவு மாணவர்கள் பயில காரணம் இதுதானா..! ஆனால் இன்று...

ஆம்... அதற்கான காரணம் அந்த பகுதியில் மட்டும் 45 மருத்துவக்கல்லூரிகள் செயல்படுகிறது என்பது குறிப்பிடதக்கது. இன்னும் சொல்லப்போனால் 2019ஆம் ஆண்டு அறிக்கையின்படி இந்தியாவில் இருந்து மட்டும் 21,000 மாணவர்கள் அங்கு பயின்று வருகின்றனர். 

this is the reason why students  shows interest to study in huang
Author
Chennai, First Published Feb 5, 2020, 1:56 PM IST

ஓஹோ.... ஹுவாங்  நகரில் இவ்வளவு மாணவர்கள்  பயில காரணம் இதுதானா..! ஆனால் இன்று...

உலகம் முழுவதும் பெரும் பீதியை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனாவில் முன் முதலில் கண்டறியப்பட்டது. கொரோனா கண்டுபிடிக்கப்பட்ட ஹுவான் நகரத்தில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து மாணவர்கள் வருகை புரிந்து மருத்துவ படிப்பை பயின்று வருகின்றனர். 

ஆம்... அதற்கான காரணம் அந்த பகுதியில் மட்டும் 45 மருத்துவக்கல்லூரிகள் செயல்படுகிறது என்பது குறிப்பிடதக்கது. இன்னும் சொல்லப்போனால் 2019ஆம் ஆண்டு அறிக்கையின்படி இந்தியாவில் இருந்து மட்டும் 21,000 மாணவர்கள் அங்கு பயின்று வருகின்றனர். குறிப்பாக மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் பயின்று வரும் மாணவர்களுக்கு கட்டணமம் குறைவு மற்றும் அங்கு தங்கி படிக்கவும் உணவுக்கான செலவும் மிகக் குறைவு என்பதே.

this is the reason why students  shows interest to study in huang

அது மட்டுமல்லாமல், அனைவருக்கும் தெரிந்த ஆங்கிலத்தில் மட்டும் வகுப்பு எடுக்கப்படுவதால் அதிக அளவில் மாணவர்கள் ஹுவாங் நகரில் பயில ஆர்வம் காண்பிக்கின்றனர். அதேபோன்று ரஷ்யாவில் உள்ள 58 மருத்துவ கல்லூரிகளும் இந்திய மருத்துவ கவுன்சிலின் பட்டியலில் இடம் பெற்று இருந்தாலும் அங்கு பயிலக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரம் மட்டுமே. காரணம் கல்விக் கட்டணம் அதிகம். இதோடு ஒப்பிடும்போது, ஹுவாங் நகரில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் தரமான கல்வியும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

this is the reason why students  shows interest to study in huang

இதன் காரணமாகவே இந்தியா மட்டுமின்றி பிரிட்டன் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவர்களும் இந்த நகரில் பயின்று வருகின்றனர். ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து உள்ளதால் அந்த பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அங்கு தங்கி பயின்று வந்த மாணவர்களும் அவரவர்  தாய் நாட்டிற்கு பறந்து செல்கின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios