this is the reason to get miss world
உலக அழகி என்றால் உடல் அமைப்பை வைத்தும்,அழகிய தோற்றத்துடனும் தான் இருக்க வேண்டும்.வெறும் அழகை வைத்தே அவர்களை உலக அழகியாக தேர்வு செய்கிறார்கள் என பலரும் பேசுவதை கேள்விபட்டிருப்போம்.
இது உண்மைதான்...ஆனால் இதனை மீறி அறிவுகூர்மை மிக முக்கியமாக இருக்கிறது..உலக அழகி போட்டியில் கடைசியாக தேர்வு செய்யபடும் சில போட்டியாளர்களிடம் சில கேள்விகளை முன் வைப்பர்
அப்போது அவர்கள் கூறும் பதிலை பொறுத்துதான்,அந்த குறிப்பிட்ட சில அழகிகளில் ஒருவரை உலகழகியாக தேர்தெடுக்கப்படுவார்கள் ...
அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் மனிஷி சில்லார்...மிஸ் வேர்ல்ட் பட்டத்தை தட்டி சென்ற இவரிடம் கேட்கப்பட்ட கேள்வி எது தெரியுமா ?

உலகிலேயே அதிக சம்பளம் வழங்கப்படும் பணி எது? என்பது தான் அந்த கேள்வி. இந்த கேள்விக்கு பதிலளித்த மனிஷி சில்லார், 'தாய்மை தான் உலகிலேயே அதிக மதிப்புள்ள பணி. இந்த பணிக்கு சம்பளமாக பணம் தரப்படாவிட்டாலும், அன்பும், பாசமும் மரியாதையும் அதிகமாக கிடைக்கும் என குறிப்பிட்டார்

ஒருவேளை சம்பளம் கொடுக்கப்பட்டால் தாய்மைக்கு தான் உலகிலேயே அதிக சம்பளம் வளங்குவதாக இருக்கும் என கூறினார்.
இவர் அளித்த இந்த பதில் சக போட்டியாளர்களையும் மெய்சிலிர்க்க வைத்தது..இவருடைய பதிலை பெரிதும் வியந்து பார்த்த நடுவர்கள் எடுத்த முடிவு தான் மனிஷி சில்லாருக்கு வழங்கப் பட்ட உலகழகி பட்டம்.....
