இதை உண்பதால் தான் உடலில் "துர்நாற்றம்" வருகிறதாம்...

நாம் உணவை உட்கொள்ளும் முறையில் இருக்கும் தீங்கு நமக்கு  தெரிவதில்லை.கண்ட உணவுகளை கட்டுப்பாடு இல்லாமல் உண்பதால் உடல் பருமன் அதிகரிப்பது மட்டுமில்லாமல்,ஏகப்பட்ட வியாதிகளை உடலுக்கு தருகிறது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க,மற்றொரு பக்கம் எந்தெந்த உணவை எடுத்துக் கொண்டால் உடலில் தேவை இல்லாத ஒரு விதமான   துர்நாற்றம் ஏற்படும் என்பதை பார்கலாம்.

அதிக படியான கார உணவு உண்டு வந்தால், அதிக வியர்வை  வெளியேற்றும்

சிவப்பு மாமிசம், உடலில் அவ்வளவு எளிதில் செரிக்காது..மேலும் அதிக படியான துர்நாற்றத்தை ஏற்படுத்தும்

10 % மேல்  ஆல்கஹால் எடுத்துக்கொண்டால் அதிக உடல் நாற்றத்தை  ஏற்படுத்தும்

பாஸ்ட்புட் அதிகம் எடுத்துக்கொள்வதால்,இதனால் உருவாகும் அதிக படியான கொழுப்பு உடல் வியர்வைக்கு காரணமாக இருக்கும்

பால் பொருட்கள்

பாலில் வெளிப்படும் ஹைட்ரஜன் சல்பைடும் மெத்தில் மெர்காப்டன் துர்நாற்றத்தை உண்டாக்குகிறது. இதனால் உடலில் ஒரு விதமான   அருவருக்கதக்க துர்நாற்றம் உருவாகும்

புகையிலை பிடிப்பவர்கள்

சிகரெட் அதிகம் பயன்படுத்துபவர்கள்,அதில் வரும் புகை வியர்வை சுரப்பியுடன் இணைந்து துர்நாற்றத்தை கொடுக்கும்.

எனவே இது போன்ற உணவு பொருட்களை அதிகம்  எடுத்துக்கொள்வதாலும்,  சிகரெட் அதிகம்  பிடிப்பதாலும் இது  போன்ற துர்நாற்றம் அதிகமாக உடலில்  ஏற்படுவதால், சற்று  குறைத்து  உண்பது நல்லது.