இந்தியாவின் விலையுயர்ந்த எருமை இதுதான்! இந்த விலைக்கு 2 ரோல்ஸ் ராய்ஸ் வாங்கிடலாம்!
மீரட்டில் நடைபெற்ற விவசாயக் கண்காட்சியில், பங்கேற்ற அன்மோல் என்ற எருமை அனைவரையும் வியக்க வைத்துள்ளது. குறிப்பாக அதன் விலை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
மீரட்டில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் வேளாண் பல்கலைக்கழகத்தில் மூன்று நாள் அகில இந்திய விவசாயிகள் கண்காட்சி மற்றும் விவசாயத் தொழில் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் பங்கேற்ற ஹரியானாவின் சிர்சாவை சேர்ந்த 'அன்மோல்' என்ற எருமை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதன்விலை,. 2 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் மற்றும் 10 மெர்சிடிஸ் கார்களை விட விலை அதிகம் என்பதே அதற்கு காரணம் ஆகும்.
இந்தியாவின் விலை உயர்ந்த எருமை
மேலும் இந்த எருமையின் விலைக்கு நொய்டா போன்ற பெரு நகரத்தில் ஒருவரு 20 சொகுசு வீடுகளை எளிதாக வாங்க முடியும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த விலை உயர்ந்த எருமையைப் பார்க்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து பார்வையாளர்கள் குவிந்து வருகின்றனர், மேலும் அதன் விலை பலரையும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதன்படி, அன்மோல் எருமையின் மதிப்பு ரூ.23 கோடியாகும். அதாவது இந்த விலைக்கு, ரூ. 1.5 கோடியில் சுமார் 15 மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் அல்லது ரூ. 12 கோடி விலையுள்ள இரண்டு ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்கலாம். இதன் மூலம் இந்தியாவின் விலை உயர்ந்த எருமை என்ற பெருமையை அன்மோல் பெற்றுள்ளது.
பாஸ்போர்ட் இல்லாம உள்ள கூட போக முடியாது! இந்தியாவில் இப்படி ஒரு ரயில் நிலையமா?
அன்மோலின் தனித்துவமான உணவுமுறை
அன்மோல் அதன் உரிமையாளர் ஜகத் சிங் கூறுகையில், அன்மோல் கடந்த 8 வருடங்களில் பல விருதுகளை வென்றுள்ளது. தினமும் 5 கிலோ பால், 4 கிலோ ஜூசி மாதுளை, 30 வாழைப்பழங்கள், 20 புரதம் நிறைந்த முட்டை, கால் கிலோ பாதாம் மற்றும் குல்கந்த் மற்றும் தீவனம் ஆகியவை இந்த எருமைக்கு உணவாக அளிக்கப்படுகிறது. அன்மோல் தினமும் இரண்டு முறை குளிக்கிறது. அதற்கு கடுகு மற்றும் பாதாம் எண்ணெயுடன் மசாஜ் செய்கிறது..
அன்மோலின் விந்துக்கு அதிக தேவை
அன்மோல் எருமையின் விந்து ஒரு மாதத்திற்கு 4-5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும், சிர்சாவைச் சேர்ந்த ஒரு குழு அதன் விந்துவைத் தொடர்ந்து சேகரித்து விநியோகிப்பதாகவும் அதன் உரிமையாளர் கூறினார். அன்மோல் முர்ரா இனத்தைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது, அதன் விந்து அரிதானது என்று கூறப்படுகிறது. எமையின் உரிமையாளர் அதன் உணவுக்காக மாதம் ரூ.60,000 செலவழிக்கும் நிலையில், விந்து விற்பதன் மூலம் ஒவ்வொரு மாதமும் ரூ.4-5 லட்சம் லாபம் ஈட்டுகிறார்.
கவனம் ஈர்த்த மற்றொரு எருமை
இந்த கண்காட்சியில், லட்சுமி மற்றும் ராணி என்ற இரட்டை எருமை மாடுகள் கவனம் ஈர்த்தன. இந்த மாடுகள் தினமும் 30 லிட்டர் பால் உற்பத்தி பலரும் அவற்றை பார்க்க ஆர்வம் காட்டினர்.
ஒரே ஸ்டேஷன்ல 23 பிளாட்பார்மா! அதிக Platform கொண்ட டாப் 10 ரயில் நிலையங்கள்!!
அன்மோலைப் பார்க்க கூடும் கூட்டம்
அன்மோலைக் காண பல்வேறு இடங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் கண்காட்சிக்கு வருகின்றனர். பலர் பரிசு பெற்ற எருமையுடன் செல்ஃபி எடுத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் அந்த எருமையை பலரும் புகைப்படங்களும் எடுத்தனர். இந்நிகழ்ச்சியை உத்தரபிரதேச விவசாய அமைச்சர் சூர்ய பிரதாப் ஷாஹி மற்றும் மாநில அமைச்சர் பல்தேவ் அவுலாக் ஆகியோர் தொடங்கி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.