நீங்கள் பயணம் செய்ய விரும்பினால் அயர்லாந்து நாட்டிற்கு துணிந்து செல்லலாம். இங்கே பயணம் செய்தால் அவர்கள் உங்களுக்கு பணம் கொடுப்பார்கள். முழுவிவரம் உள்ளே.. 

பலர் அவ்வப்போது வெவ்வேறு இடங்களுக்கு பயணம் செய்ய விரும்புகிறார்கள். தங்கள் சொந்த ஊரை விட்டு முற்றிலும் புதிய நாட்டிற்கு அல்லது ஊருக்கு செல்ல விரும்புகிறார்கள். பலர் மற்ற கலாச்சாரங்களையும் வாழ்க்கை முறைகளையும், அனுபவிக்க விரும்புகிறார்கள். ஆனால், ஒரு புதிய இடத்திற்குச் செல்வது மிகவும் செலவுமிக்க விஷயம். அதற்கென சேமிப்பு தேவைப்படுகிறது. ஆனால் இனி அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். ஏனெனில் நீங்கள் பயணம் செய்தால் உங்களுக்கு பணம் கிடைக்கும், அது எப்படி? அயர்லாந்து அப்படியொரு சலுகையை வழங்குகிறது? அயர்லாந்து அங்கு செல்லும் அனைவருக்கும் £80,000 (சுமார் 71 லட்சம்) அதிகமாக செலுத்துகிறது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அயர்லாந்திற்கு இடம்பெற முடிவு செய்பவர்களுக்கு கணிசமான நிதிச் சலுகைகள் வழங்கும் திட்டத்தை அந்நாடு அறிமுகப்படுத்தியுள்ளது. அயர்லாந்தின் தீவுகளின் மக்கள்தொகையை அதிகரிக்க, ஐரிஷ் அரசாங்கத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதையும் படிங்க: சென்னையில் மிஸ் பண்ணக் கூடாத 5 கடற்கரைகள்!!

அயர்லாந்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, 'இத்திட்டத்தின் நோக்கம் நிலையான மற்றும் துடிப்பான சமூகங்கள் கடல் நடுப்பகுதிகளில் செழித்து வளர்வதை உறுதி செய்வதாகும்'. இந்த தீவுக்கு செல்பவர்கள் தீவுகள் வழங்கும் தனித்துவமான கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் இயற்கை வளங்களை அனுபவித்து மகிழலாம் என அந்நாட்டு அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஜூலை 1ஆம் தேதி முதல் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் எனத் தெரிகிறது. 

அயர்லாந்தின் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே இருந்தாலும், அந்நாட்டின் கலச்சாரம், பாரம்பரியம், சுற்றுச்சூழலை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதேபோன்ற திட்டம் இத்தாலியில் உள்ள ஒரு நகரத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: இந்தியாவுல இயங்கும் இந்த ரயிலுக்கு டிக்கெட் தேவையில்லை.. 1 பைசா செலவில்லாமல் போய்ட்டு வரலாம்..!!