thirupathi temple gave new instructions adhar is must since may 1

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு...! அவ்ளோ தூரம் போயி சாமிய பாக்க முடிலனா எப்படி ..?

திருப்பதி செல்லும் பக்தர்கள் எழுமலையான தரிசிக்க மே 1 ஆம் தேதி முதல் ஆதார் அல்லது வாக்களார் அடையாள அட்டை கட்டாயம் என தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்து உள்ளது

அதன்படி, ஏழுமலையானை தரிசிக்க இலவச தரிசன டிக்கெட் பெற வேண்டும் என்றால், ஆதார் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது

மேலும் ஆதார் இல்லாதவர்கள் வாக்களார் அடையாள அட்டையை காட்ட வேண்டும் என்றும். இவை இரண்டுமே இல்லாதவர் கைரேகை வைத்து டிக்கெட் பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது

கைரேகை வைத்து டிக்கெட் பெற விருப்பம் இல்லாதவர்கள், காத்திருப்பு மண்டபத்தில் காத்திருந்து ஏழுமலையானை தரிசிக்கலாம் என்றும் கூறப்பட்டு உள்ளது

மேலும், கைரேகை வைத்து டிக்கெட் பெரும் பக்தர்கள், டிக்கெட்டில் குறிப்பிட்ட நேரத்தின் படியே சாமியை தரிசனம் செய்ய முடியும் என்றும் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்து உள்ளது