பக்தர்களே..! திருப்பதி லட்டு விலை அதிரடி உயர்வு..!  எவ்வளவு ரூபாய் தெரியுமா..? 

திருப்பதி என்றாலே முதலில் நமக்கு நினைவுக்கு வருவது லட்டு மட்டுமே. இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தின் மானியம் வைகுண்ட ஏகாதசி முதல் ரத்து செய்யப்படும் என தெரிவித்து உள்ளதால், லட்டு  விலை உயர வாய்ப்பு உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது

ஒரு லட்டு தயாரிக்க திருப்பதி திருமலை தேவஸ்தானம் கூடுதலாக செலவிடுகிறது. அதாவது ஒரு லட்டு தயாரியாக்க மட்டும் ரூபாய் 38 செலவாவது. இந்த நிலையில் தற்போது நடைபயணமாக வரும் பக்தர்களுக்கு இலவசமாக ஒரு லட்டு வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் இலவச  இலவச தரிசனத்தில் மலை ஏறி வரும் பக்தர்களுக்கு சலுகை விலையில் 4 லட்டுகள் ரூபாய் 70 க்கு வழங்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக ஆண்டுக்கு ரூபாய் 250 கோடி இழப்பு ஏற்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதனை சரி செய்யும் பொருட்டு சலுகை விலையில் லட்டுகள் வழங்கும் நடைமுறையை ரத்து செய்து அதற்கு பதிலாக அனைத்து தரிசன பக்தர்களுக்கும் தலா ஒரு லட்டு இலவசமாக வழங்கவும், அதற்கு மேல் கூடுதலாக லட்டு தேவைப்படுபவர்களுக்கு ஒரு லட்டு ரூபாய் 50 க்கு விற்பனை செய்யவும் தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. இந்த முறை வைகுண்ட ஏகாதசி முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.