தல அஜித்தின் மச்சானை வைத்து டாக்டர் ராமதாஸ் எடுக்கும் பழிவாங்கல் படம்: தாறுமாறாக கொதிக்கும் திருமாவளவன்.

வழக்கமாக பாட்டாளி மக்கள் கட்சிதான் திரைப்படங்களுக்கு எதிராக கொதித்து எழும், எகிறி குதிக்கும். ரஜினிகாந்தின் பாபா படத்தின் ரிலீஸ் நாளில், படப்பெட்டியையை தூக்கிச் சென்றும், தியேட்டர்களில் ஸ்க்ரீனை கிழித்தும் அதகளம் பண்ணினார்கள். ரஜினியின் செல்வாக்கை ராமதாஸின் டீம் கொத்துக்கறி போட்டதால், சினிமாவை விட்டே நகர்ந்துவிடலாம்! எனும் முடிவுக்கு வந்தார் ரஜினி. அதன் பின் கமல் போன்றோர்தான அவரை ‘இப்ப நீங்க நகர்ந்தால், பயந்து ஓடிட்டீங்கன்னு சொல்லுவாங்க. அவங்களுக்கு பெரிய கொம்பு முளைச்சுடும்.’ என்று சொல்லி மீண்டும் சினிமாவுக்குள் இழுத்து வந்தனர். 

அதன் பின் பா.ம.க. நிறுவனரான ராமதாஸின்  மகன் அன்புமணி மத்தியமைச்சராக இருந்தபோது புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகளில் நடிக்காதீர்கள் என்று தமிழ் சினிமா ஹீரோக்களுக்கு அட்வைஸ் மழை பொழிந்ததும் பரபரப்பானது. இப்படியாக பா.ம.க.வுக்கும், தமிழ் சினிமா உலகத்துக்கும் எப்போதும் முட்டலும், மோதலும்தான் நடக்கும்.
ஆனால் முதல் முறையாக ஒரு சினிமாவின் பின்னணியில் ராமதாஸ் இருக்கிறார், அவரது உதவியோடுதான் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள், இந்தப் படம் முழுக்க முழுக்க விடுதலைச் சிறுத்தைகளை விமர்சிக்கும் படம், அப்படத்தில் வரும் வில்லன் கேரக்டர் திருமாவளவனைக் குறி வைத்துதான் எடுக்கப்பட்டுள்ளது! என்றெல்லாம் தாறுமாறாக கொதிக்கிறது கோடம்பாக்கம். அந்தப் படத்தின் பெயர் ‘திரெளபதி’. 

வட தமிழகம் மற்றும்  மேற்கு தமிழகத்தின் சில மாவட்டங்களில் பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கும், தலித்களுக்கும் இடையில் நடக்கும் காதல், கல்யாணம், நாடக காதல், கெளரவ கொலைகள்  உள்ளிட்ட பஞ்சாயத்துகளை மையமாக வைத்து பேசுகிறது இப்படம். அதாவது  தாழ்த்தப்பட்ட பிரிவினரை தாக்குவதாக இப்படம் அமைந்துள்ளது என்பதே பொதுவான கருத்து. 
இந்த நிலையில் இந்தப் படம் பற்றி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளரான வன்னியரசு ஓப்பனாக கொதித்திருக்கிறார் இப்படி....”தமிழகத்தில் சாதிகளிடையே குழப்பத்தை உருவாக்கவே எடுக்கப்பட்ட படமாக இந்த ‘திரெளபதி’ வர இருக்கிறது. இந்தப் படத்தை மக்களிடம் இருந்து திரட்டப்பட்ட பொது நிதியில் எடுத்ததாக கூறுகிறார்கள். ஆனால் உண்மையில் இந்தப் படத்தை பா.ம.க. நிறுவனத் தலைவர் ராமதாஸ் உதவியோடுதான் எடுத்திருக்கிறார்கள். 

எங்கள் தலைவர் தொல்.திருமாவளவன் முற்போக்கு சிந்தனைவாதி. கருத்துக்களை நேரடியாக சொல்லிப் பழக்கப்பட்டவர். அவரோடு நேரடியாக மோத ராமதாஸுக்குப் பயம். அதனால்தான் இப்படி மறைமுகமாக அவதூறு பரப்பும் செயலில் ஈடுபட்டுள்ளார். இதற்கான எதிர்விளைவுகளைக் கூடிய விரைவில் சந்திக்க நேரிடும். 

இந்தப் படத்தை மக்களிடத்தில் கொண்டு செல்லவிடாத வகையில் வழக்குத் தொடருவோம்.” என்று கூறியிருக்கிறார். 
ஆனால் பா.ம.க.வின் செய்தித் தொடர்பாளரான விநோபா பூபதியோ “வன்னியரசு கூறுவது போலி குற்றச்சாட்டு. அவர் கூறும் புகார்களுக்கு ஆதாரம் இருக்கிறதா? திரெளபதி படத்தை எடுக்க நாங்கள் உதவினோம் என்றால் அட்டக்கத்தி, பரியேரும் பெருமாள் படங்களை எடுக்க விடுதலைச் சிறுத்தைகள் உதவினார்களா?’ என்று நறுக்கென கேட்டுள்ளார்.

இந்நிலையில் திரெளபதி படத்தின் பிரதான கேரக்டரில் நடிகர் ரிச்சர்ட் நடித்துள்ளார். இவர் அஜித்தின் மனைவியான நடிகை ஷாலினியின் அண்ணன். இந்த வகையில் அஜித்தையும் இந்த விவகாரத்தில் இழுத்து விட்டுள்ளனர் சிலர் . 
தன் மச்சான் இப்படி தாழ்த்தப்பட்டோரை குரூரமாக சித்தரிக்கும் படத்தில் நடிப்பது அஜித்துகு தெரியாமலா இருக்கும்? அஜித் ஒரு உயர் சாதி காரர் ஆக அவரும் அந்த உயர்மட்ட எண்ணத்தில்தான் மச்சானை தடுக்காமல், தட்டிக் கொடுத்திருக்கிறார்! என்று பாவம் தலயின் தலையையும் உருட்ட துவங்கியுள்ளது திருமாவின் வட்டாரம். 
சூப்பரப்பு!

-    விஷ்ணுப்ரியா