ராணுவ வீரரின் போட்டோ பார்த்தவுடன்... மன்னிப்பு எழுதிவிட்டு திருடாமல் சென்ற "நல்ல  திருடன்"..! 

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ளது திருவாங்குளம் என்ற பகுதி. இந்த பகுதியில் உள்ள ராணுவ வீரர் ஒருவரின் வீட்டில் திருடன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்து உள்ளான். பின்னர் உள்ளே இருந்த ஒரு சில புகைப்படத்தை பார்த்துவிட்டு "இது ராணுவ வீரரின் வீடு என தெரிந்தும் வீட்டிற்கு வெளியே உள்ள சுவரில் மன்னிப்பு கேட்டு எழுதியுள்ளான்.

அதில் இது இராணுவ வீரரின் வீடு என தெரியாமல் உள்ளே நுழைந்து விட்டேன். நான் பைபிளின் ஏழாவது கட்டளையை மீறி விட்டேன். ராணுவ அதிகாரி அவர்களே...  என்னை மன்னித்து விடுங்கள் என குறிப்பிட்டு உள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடையே ஏற்படுத்தி சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் திருட சென்றவன், இராணுவ வீரர் வீடு என தெரிந்ததும் வீட்டிலுள்ள பொருட்கள் எதுவும் திருடாமல் மன்னிப்பு மட்டும் கேட்டு விட்டு வெளியேறிய சம்பவம் நல்ல திருடனாக இருப்பானோ என சிந்திக்க வைத்துள்ளது.

செய்வது  திருட்டு தொழிலாக இருந்தாலும், நல்ல  திருடனாக இருக்கிறானே என அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்து சிரிக்கின்றனர். மேலும், இது குறித்து தகவல் அறிந்த போலீசார் திருடனை தேடி வருகின்றனர்.