நம் கஷ்டத்திற்கு வீட்டில் உள்ள இந்த பொருளும் காரணமாம்..! 

நம் வீட்டில் உள்ள சில பொருட்களே ஐஸ்வர்யம் தங்க விடாமல் செய்து விடும் என்ற ஐதீகம் உள்ளது. இதெல்லாம் அது போன்ற பொருட்கள் என்பதை பார்க்கலாமா..? 

விலங்குகள் 

ஒரு சில விலங்குகள் அதிக கோபத்துடன் இருக்கும்படியாக உள்ள படத்தை நம் வீட்டின் சுவற்டில் பொருத்தி இருப்போம். அதை பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், அதன் கோபம் நம்மை எதிர்மறையாக தாக்கும். நம் வீட்டில் உள்ளவர்களிடம் கோபமாக நடந்துக்கொள்வோம் 

நடராஜர் 

நடராஜர் உருவம் அதாவது சிவபெருமான் கோபத்தில் இருக்கும் போது அவாதாரம் எடுத்த உருவம் அது.

அது மட்டும் இல்லாமல், சிவன் அழிக்கும் செயலை செய்யக்கூடியவர். எனவே அவரை வணங்க கோவிலுக்கு செல்லலாம். வீட்டில் வைப்பது அந்த அளவிற்கு நல்லது கிடையாது.

மகாபாரதம் காட்சிகள் வைக்க கூடாது 

மகாபாரதம் மிகவும் புனிதமாக கருதப்பட்டாலும்.. அதில் வரும் சித்திரங்கள் மிக அழகாக இருந்தாலும் அதன் அதிர்வுகள் வீட்டில் உள்ளவர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தும்.

போரிடும் காட்சி 

இதே போன்று போர் புரிவது போன்ற காட்சி, மந்திரம் ஓதுவது போன்ற காட்சி, பூகம்பம் ஏற்படுவது போன்ற காட்சி இது போன்ற எந்த காட்சி குறித்த போஸ்டரும் வீட்டில் வைக்கக்கூடாது 

ஓடும் நதிநீர்
 
நதிநீர் பார்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கும் தானே...பொதுவாகவே நிறைய பேர் வீட்டில் இது போன்ற ஓடும் நீர் உள்ளது போன்ற படங்கள் இருப்பதை பார்த்து இருப்போம். நதிநீர் புகைப்படம் வைத்தால் வீட்டில் பணம் தங்காது... நீர் ஓடுவதை போலவே, பணமும் செலவாகிவிடும் என்கிறது ஐதீகம்.இதே போன்று தண்ணீரில் மூழ்கும் கப்பல், தாஜ் மஹால் உள்ளிட்டவற்றையும் வீட்டில் வைக்கக்கூடாது  என்கிறது ஐதீகம்...

காரணம்...மூழ்கும் கப்பல் என்பது நடக்கக்கூடாத ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. மேலும் தாஜ்மகாலை பற்றி சொல்லும் பொது தனது மனைவி மும்தாஜ் நினைவாக ஷாஜகான் கட்டியது. எனவே இது போன்ற படங்களை வீட்டில் வைக்கக்கூடாதாம்.

மேற்குறிப்பிட்ட சில விஷயங்களை நம் வாழ்க்கையில் கடைபிடித்தால் கண்டிப்பாக மாற்றத்தை உணர முடியும் என்கிறது ஐதீகம்