நம் சருமத்தை எப்போதும் மிக அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் அதற்காக சில முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.

ஒரு சிலர் டோனர்ஸ் பயன்படுத்துவார்கள்...முகத்தில் அதிகப்படியான எண்ணெய் வழிதல், சரியான ரத்த ஓட்டம் இல்லமால் முகம் சோர்வடைந்து காணப்படும்.

இது போன்ற சமயத்தில், குக்கும்பர், கிரீன் டீ, ஆப்பிள், சிடர் வினிகர், உருளைக்கிழங்கு, தக்காளி, லெமன் மற்றும் ஒயிட் வைன்...இதில் ஏதாவது ஒன்றை தினமும் பயன்படுத்தி வரும் போது, முகம் பிரகாசமாக காணப்படும்.

இதை விட மிக முக்கியமான ஒன்று, இரவு நேரத்தில் படுக்கும் முன்பாக முகத்தை நல்ல நீரில் சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால், முகத்தில் இருக்கக்கூடிய அதிக படியான அழுக்குகள் வெளியேறும். அதில் குறிப்பாக முகத்தில் உள்ள பருக்கள், தோலில் சேர்ந்து இருக்கும் அழுக்குகள்  வெளியேறும்..முகம் தூய்மை அடையும்

லெமன் மற்றும் தேன் கலவை :

லெமன் மற்றும் தேன் கலந்த கலவையை, முகத்தில் தடவி சுமார் 15 நிமிடம் அப்படியே விட்டுவிட்டு பின்பு  நன்கு கழுவ வேண்டும். இதன் பின், லெமன் மற்றும் ஆரஞ்சு தோலை நன்கு காய வைத்து அதனை பொடி செய்து வைத்துக்கொள்ள  வேண்டும். இதனை முகத்தில் போட்டு ஒரு ஸ்க்ரப் போன்று பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதே போன்று, ரோஸ் வாட்டர் மற்றும் பழங்கள் முகத்தில் அப்ளை செய்து வந்தால் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

ஆப்பிள், பப்பாளி மற்றும் வாழைப்பழம் இதனுடன் சிறிது லெமன் சேர்ந்து நன்கு கலந்து முகத்தில் தடவி வர முகம் பிரகாசமாக இருக்கும். இதனை தினமும் செய்யலாம்.