முக்கியமானது இதய் நோய். உணவுப் பழக்கவழக்கங்கள் மூலமே இதய நோயை தடுக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள் 

பூண்டு

இதய ஆரோக்கியத்தை காப்பாத்தில் பூண்டிற்கு முக்கிய பங்கு உள்ளது. இதில் உள்ள அல்லிசின்(allicin) என்ற மூலப் பொருள் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.மாரடைப்புகளை பூண்டு தடுக்கும். 

ஆரஞ்ச் 

வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ள இந்த ஆரஞ்ச் மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கும். கொலஸ்ட்ராலின் அளவை கட்டுக்குள் வைக்கும். இதயத்தில் ஏதேனும் அடைப்புகள் இருந்தால் சரி செய்து விடும்.

மாதுளை

மாதுளை ரத்த ஓட்டத்தை சீராக்கி இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும். ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிக அளவில் இதில் இருப்பதால் எதிர்ப்பு சக்தியை கூட்டி மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கும். 

பச்சை கீரையில் அதிக அளவில் பொட்டாசியம், நார்சத்து, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கும் 

திராட்சை

எண்ணற்ற பிளவானட்ஸ் மற்றும் வைட்டமின் சி கொண்ட பழ வகைகளில் ஒன்றான திராட்சை மாரடைப்பு ஏற்படுவதை 20 சதவீதம் வரை தடுப்பதாக ஆய்வாளர்களும் கூறுகின்றனர்.

உருளைக்கிழங்கு 

பொட்டாசியம் அதிகம் நிறைந்துள்ள உருளைக்கிழங்கு இதய நலனை பாதுகாக்கிறது. ஆனால், உருளை கிழங்கை வறுத்து சாப்பிட கூடாது. வேக வைத்து சாப்பிடுவதே இதய ஆரோக்கியத்தை பலப்படுத்தும் 

தக்காளி 

தக்காளியில் உள்ள lycopene என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் ரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது. தொடர்ந்து தக்காளி ஜுஸை குடித்தால் மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கும் 

பாதாம் 

வைட்டமின் ஈ நிறைந்த பாதாம் இதயத்திற்கு பல வித நன்மைகளை தரும். பிஸ்தா, வால்நட், வேர்க்கடலை போன்றவையும் இதய ஆரோக்கியத்துக்கு உகந்தவை. இவை கெட்ட கொழுப்பை குறைக்க கூடியவை

பருப்பு வகை 

22 சதவீத இதய கோளாறுகளை தடுப்பதில் பருப்பு வகைக்கு முக்கிய இட்ம் உண்டு. பீன்ஸ், பச்சை பட்டாணி போன்றவை ஆரோக்கியமான உணவு வகைகளை சார்ந்தவை