Spine Health: அதிக எடை கொண்ட பேக்குகளை தூக்குவது, மணிக்கணக்கில் நிற்பது, டிராஃபிக்கில் நீண்ட நேரம் உட்கார்ந்து பயணம் செய்வது போன்றவை நமது முதுகுத்தண்டின் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கலாம்.
நம்மில் பலர் தினமும் நீண்ட நேரம் பயணம் செய்கிறோம். ஆனால், பயணம் செய்யும்போது நாம் செய்யும் சில தவறுகளால் முதுகுத்தண்டுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அப்படி நாம் தவிர்க்க வேண்டிய 6 பழக்கங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
அதிக எடை கொண்ட பேக்குகளை நீண்ட நேரம் தூக்குவது
பேக்கின் அதிக எடை, முதுகுத்தண்டில் தேவையில்லாத அழுத்தத்தைக் கொடுத்து, கடுமையான முதுகு வலிக்கு வழிவகுக்கும்.
நீண்ட தூரம் பைக், ஸ்கூட்டரில் பயணம் செய்வது
தொடர்ந்து பைக் ஓட்டும்போது பேலன்ஸ் செய்வது, திடீரென பிரேக் பிடிப்பது, ரோட்டில் உள்ள பள்ளங்களில் ஏறி இறங்குவது போன்றவை கழுத்து மற்றும் கீழ் முதுகுத்தண்டுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
பஸ்ஸின் கடைசி சீட்டில் பயணம்
பஸ்ஸின் பின் சீட்களில் உட்காரும்போது, ரோட்டில் ஏற்படும் குலுக்கமும் அதிர்வும் அதிகமாக இருக்கும். இது கீழ் முதுகுத்தண்டில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.
காரில் தவறான பொசிஷனில் உட்காருவது
நீண்ட தூரம் காரில் பயணம் செய்யும்போது, முதுகுத்தண்டுக்கு சப்போர்ட் இல்லாமல் தவறான முறையில் உட்கார்ந்தால், கழுத்து மற்றும் முதுகுத்தண்டு தசைகளில் காயம் ஏற்படலாம்.
தொடர்ந்து போனை குனிந்து பார்ப்பது
பயணம் முழுவதும் தலையைக் குனிந்து போனைப் பயன்படுத்தினால், கழுத்து தசைகளில் அதிக அழுத்தம் ஏற்பட்டு, பார்வை மங்குவதற்கும் காரணமாகும்.
கூட்ட நெரிசலான நேரத்தில் ரயில் பயணம்
பீக் ஹவர்ஸில் ரயிலில் பயணம் செய்வது உடலுக்கு அதிக சிரமத்தைக் கொடுக்கும். முடிந்தால், கூட்டம் இல்லாத நேரங்களில் பயணம் செய்து, சீட் கிடைப்பதை உறுதி செய்யுங்கள்.


