Guru Peyarchi Palangal 2022: நவகிரகங்களில் வியாழன் மற்றும் சுக்ரன் மிகவும் முக்கியமான கிரகங்களாக கருதப்படுகின்றன. சுக்கிரன் ஆடம்பரம், பொருள் இன்பம், காதல், திருமண வாழ்க்கை போன்றவற்றின் காரணியாக விளங்குகிறார்.
நவகிரகங்களில் வியாழன் மற்றும் சுக்ரன் மிகவும் முக்கியமான கிரகங்களாக கருதப்படுகின்றன. சுக்கிரன் ஆடம்பரம், பொருள் இன்பம், காதல், திருமண வாழ்க்கை போன்றவற்றின் காரணியாக விளங்குகிறார். அதேபோன்று, குரு பகவான் மகிழ்ச்சி, அறிவு, குழந்தைகள், ஆன்மீகப் பணி, தொண்டு, அறம் மற்றும் முன்னேற்றத்திற்கான காரணியாக விளங்குகிறார். எனவே, இந்த இரண்டு கிரகங்களும் ஒரே ராசியில் இருப்பது சில ராசிகளுக்கு மிகவும் சுபமாக இருக்கும்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, குரு பகவான் 2022 ஏப்ரல் 13 ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் மாறியுள்ளார். அதேபோன்று, சுக்கிரன் 2022 ஏப்ரல் 27 ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து குரு ஆளும் மீன ராசிக்கு வந்துள்ளார்.
எனவே, குரு மற்றும் சுக்கிரன் 2022 மே 23 வரை மீன ராசியில் இருப்பார்கள். இந்த இரண்டு கிரகங்களும் ஒரே ராசியில் இருப்பது குறிப்பிட்ட இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை பெய்யும். யார் அந்த பாக்கியவான்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
மீனம்:
குரு, சுக்கிரன் கூட்டணியால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் உண்டு. உங்களின் வருமானம் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வேலை கிடைக்கலாம். வியாபாரிகளும் லாபம் அடைவார்கள். வியாபாரம் பெருகும். ஆடம்பரமும் வசதியும் பெறுவீர்கள்.
கடகம்:
குரு, சுக்கிரன் கூட்டணியால் எதிர்பாராத வகையில் பண ஆதாயம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அதிர்ஷ்டம் உங்களுடன் நிறைய இருக்கும். இது வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் பயனளிக்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு வாழ்க்கையில் மகிழ்ச்சி அலை வீசும். வேலையில் புது தெம்பு பிறக்கும். சொத்து வாங்கவும் விற்கவும் நல்ல நேரமாக இருக்கும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு சுக்கிரன், குரு கூட்டணி தொழில்-வியாபாரத்தில் வலுவான ஆதாயங்களைக் கொடுக்கும். அதிர்ஷ்டம் அதிகரிக்கும். புதிய வேலை கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம். இதன் மூலம் பொருளாதார நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும். வருமானம் அதிகரிக்கும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரம் தொழில்-வியாபாரத்தில் வலுவான ஆதாயங்களைக் கொடுக்கும். புதிய வேலை கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம். இதன் மூலம் பொருளாதார நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். உங்கள் பணி சிறப்பாக இருந்ததற்காக பாராட்டப்படும். மொத்தத்தில் இந்த நேரம் பலன் தரும்.
மகரம்:
மகரம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரம் அதிர்ஷ்ட பலன் கிடைக்கும். குடும்பத்தில் சிறந்த சூழல் நிலவும். வருமானம் உயரும் வாய்ப்புகள் உண்டு. வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும்.உறவுமுறைகள் சிறப்பாக இருக்கும். சொத்து வாங்கவும் விற்கவும் நல்ல நேரம் இது. பொருளாதார பலன்கள் உண்டாகும்.
