Horoscope Today: நிழல் கிரகமான ராகு மற்றும் கேது 18 ஆண்டுகளுக்கு பிறகு, தனது ராசியை மாற்றுகின்றனர். இவை, யார் யாருக்கு யோகம் அள்ளித்தரும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
நிழல் கிரகமான ராகு மற்றும் கேது 18 ஆண்டுகளுக்கு பிறகு, தனது ராசியை மாற்றுகின்றனர். இவை, யார் யாருக்கு யோகம் அள்ளி தரும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
ராகு-கேது பெயர்ச்சி:
நிழல் கிரகமான ராகு மற்றும் கேது 18 ஆண்டுகளுக்கு பிறகு, ராசி மாறுகின்றனர். ராகு 2022 ஏப்ரல் 12 ஆம் தேதி ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடம் மாறுகின்றனர். தீய கிரகமாக கருதப்படும் ராகு, இந்த மேஷ ராசியில் சுமார் 1 1/2 ஆண்டுகள் இருப்பார். அதே நாளில், கேது விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடம் மாறுகிறார். நிழல் கிரகமான கேது ஒரு மர்மமான கிரகமாக கருதப்படுகிறது. இந்த ராசி மாற்றம் சில ராசி காரர்களுக்கு கஜகேசரி யோகம் அள்ளி தருகிறது.
கஜகேசரி யோகம்:
யானை மற்றும் அரிமாவின் வலிமை பெற்ற ஒரு நிலை, கஜகேசரி யோகம் என்று பொருள். இந்த யோகம் பெற்ற ஒருவர் ஒரு வலிமை பெற்ற யானை போன்று அனைத்து தடங்கல்களையும், தர்த்து எறிந்துவிடுவார். அது தான் இந்த கஜகேசரி யோகத்தின் வலிமை ஆகும். இந்த யோகம் எந்தெந்த ராசிகளுக்கு கிடைக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்:
ராகு, கேதுவின் ராசி மாற்றம், மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நாள் சிறந்த பலன்களை அடைய உறுதுணையாக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சந்தோஷம் கிடைக்கும். இந்த காலகட்டத்தில், எல்லா விஷயங்களிலும் வெற்றி நிச்சயம்.
கும்பம்:
ராகு கேதுவின் ராசி மாற்றம் கும்பம் ராசிக்காரர்களுக்கு நம்பிக்கையை அதிகரிக்கும். பண வரவு அதிகரிக்கும். வெளியூர் செல்லும் யோகம் கிடைக்கும். குடும்பத்திலும் மகிழ்ச்சி நிலவும். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். மொத்தத்தில், இந்த நேரம் எல்லா வளமும், நலமும் சிறப்பாக இருக்கும். போட்டி தேர்வுகள் வெற்றியை தரும்.
சிம்மம்:
சிம்மம் ராசிக்காரர்களுக்கு ராகு கேதுவின் ராசி மாற்றம் செல்வம் செழிப்பு அதிகரிக்கும். பணியிடத்தில் வெற்றி உண்டாகும். வியாபாரம் செய்யும் துலா ராசிக்காரர்களுக்கு வெற்றி நிச்சயம். எல்லா விஷயங்களிலும் சற்று பொறுமையை கடைபிடிப்பது நல்லது.
தனுசு:
ராகு-கேதுவின் ராசி மாற்றம் தனுசு ராசிக்காரர்களுக்கு அதிக பலன்களைத் தரும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது. வருமானம் அதிகமாகவே இருக்கும். வெளிநாட்டு பயணங்கள் மற்றும் யாத்திரைகளை மேற்கொள்வீர்கள். முன்னேற்றத்திற்கான புதிய பாதைகள் திறக்கப்படும். குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சி பொங்கும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்கள் ராகு-கேதுவின் ராசி மாற்றம் செல்வன் அள்ளி கொடுக்கும். வீட்டின் தேவைகளை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள்.பொருளாதாரம் முன்னேற்றம் காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு நீண்டநாள் இழுபறியில் இருந்து வந்த வேலைகள் முடிந்துவிடும்.
