Chandra Grahan Palangal 2022: ஜோதிட சாஸ்திரத்தின் படி, இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே 16 ம் தேதி 2022 அன்று விருச்சிக ராசியில்  நடைபெற உள்ளது. இதன் அசுப பலன்கள் சில ராசிகளுக்கு இருக்கும். 

ஜோதிட சாஸ்திரத்தின் படி, இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே 16 ம் தேதி 2022 அன்று விருச்சிக ராசியில் நடைபெற உள்ளது. இதன் அசுப பலன்கள் சில ராசிகளுக்கு இருக்கும். 

சந்திர கிரகணம் 2022:

சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. 2022 ஆம் ஆண்டில் இரண்டு சந்திர கிரகணங்கள் இருக்கும். இந்த ஆண்டில் முதல் சந்திர கிரகணம் மே 16ஆம் தேதி வைஷாக பூர்ணிமா தினத்தில் நடைபெறும். இந்திய நேரப்படி, காலை 7 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி வரை நீடிக்கும். இந்த கிரகணம் இந்தியாவில் தெரியாது. ஆனால், தென் அமெரிக்கா, பசிபிக் அட்லாண்டிக் மற்றும் அண்டார்டிகா போன்ற நாடுகளில் இந்த கிரகணத்தை பார்க்க முடியும்.

இரண்டாவது சந்திர கிரகணம் நவம்பர் 8 அன்று நடைபெற உள்ளது. இந்த கிரகணம் மாலை 05:28 மணிக்கு துவங்கி காலை 07:26 மணி வரை நீடிக்கும். இந்த கிரகணம் இந்தியாவின் சில பகுதிகளில் தெரியும். 

இந்த கிரகணத்திற்குப் பிறகு, ஸ்நானம் செய்வதும் பின்னர் தானம் செய்வதும் முக்கியம், இதனால் கிரகணத்தின் எதிர்மறை பாதிப்புகள் தவிர்க்கப்படலாம். எனவே, இந்த ஆண்டில் நிகழும் இரண்டு சந்திர கிரகங்களின் மாற்றம் யார் யாருக்கு சுப மற்றும் அசுப பலன்களை தரும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

விருச்சிகம்:

பஞ்சாங்கத்தின் படி, இந்த முறை சந்திர கிரகணம் விருச்சிக ராசியில் நடைபெறும். இந்த நேரத்தில், விருச்சிகம் ராசிக்காரர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். உங்களுக்கு வியாபாரத்தில் தடைகள் வரும். வேலை தேடுபவர்களுக்கு சிக்கல் சந்திக்க நேரிடும். நீங்கள் வெளியே செல்லும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 

ரிஷபம்:

உங்களுக்கு சந்திர கிரகணம் கெடு பலன்களை கொடுக்கும். முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். உங்களுக்கு தொழிலில் தோய்வுகள் ஏற்படும். இந்த ராசிகள் வெளியிடங்களுக்கு செல்லும் போது கவனமாக இருப்பது அவசியம். இந்த காலக்கட்டத்தில் வன்முறை தொடர்பான சம்பவங்கள் தவிர்த்து நல்லது. 

கும்பம்:

உங்களுக்கு சந்திர கிரகணம் பிரச்சனையை உண்டு பண்ணும். உறவுமுறை மோசமடையக்கூடும். நீங்கள் இந்த நேரத்தில் பொறுமையுடனும் நிதானத்துடனும் இருப்பது அவசியம். இந்த ராசிக்காரர்கள் பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்க வேண்டும், இல்லையெனில் பெரிய நஷ்டம் ஏற்படும். மேலும், முதலீடுகளை தாமத படுத்த வேண்டும். இல்லையெனில் தொழில் நஷ்ட்டம் ஏற்படும். 

மேலும் படிக்க....Sukran Peyarchi 2022: இந்த ராசிகளுக்கு அதிகப்படியான தாக்கம்..யாருக்கு நன்மை? யாருக்கு தீமை? 12 ராசிகளின் பலன்!