தமிழகத்தில் மழை..! வானிலை ஆய்வு மையம் தகவல்..! 

தமிழகத்தில் அடுத்து வரும் 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தென் கிழக்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய பெருங்கடல் பகுதிகளில் பகுதிகளில் தற்போது காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டு உள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகம் முழுவதுமே லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார மலை பகுதிகளில் மட்டும் அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு உரை பனி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையை பொறுத்தவரை நாளை மற்றும் நாளை மறுநாள் அவ்வப்போது மேக மூட்டதுடன் காணப்படும் என்றும் காலை நேரத்தில் அதிக பனி இருக்க வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.