Asianet News TamilAsianet News Tamil

கொரோனாவை அலேக்கா தட்டி தூக்கிய ஈரோடு.! வந்த வேகத்தில் விரட்டி அடித்து சாதனை..!

தற்போது தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்று வரை 1629 ஆக உள்ளது. தமிழகத்திலேயே ஈரோடு மாவட்டத்தில் தான் தொடக்கத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை படு வேகமாக அதிகரித்து வந்தது. அதன் பின்னர்  சென்னையில் மிக வேகமாக அதிகரித்து 373 ஆக உள்ளது.

there is no news for last 2 days in erode
Author
Chennai, First Published Apr 23, 2020, 12:55 PM IST

கொரோனாவை அலேக்கா தட்டி தூக்கிய ஈரோடு.! வந்த வேகத்தில் விரட்டி அடித்து சாதனை..! 

ஈரோடு மாவட்டத்தில் மிக வேகமாக பரவி வந்த கொரோனா வைரஸ் தொற்று தற்போது குறைந்து உள்ளது. அதன் படி கடந்த 2 நாட்களில் மட்டும் எந்த ஒரு புதிய நோய் தொற்றும் இல்லை என அறிவிப்பு வெளியாகி உள்ளது 

தற்போது தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்று வரை 1629 ஆக உள்ளது. தமிழகத்திலேயே ஈரோடு மாவட்டத்தில் தான் தொடக்கத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை படு வேகமாக அதிகரித்து வந்தது. அதன் பின்னர் சென்னையில் மிக வேகமாக அதிகரித்து 373 ஆக உள்ளது.

இப்படி ஒரு நிலையில் மிக வேகமாக கொரோனா தொற்று அதிகமாக இருந்த ஈரோடு மாவட்டத்தில் 70   மட்டுமே பாதிப்பு  அ டைந்து உள்ளனர். அதிலும் நேற்று 28 பேர் குணமடைந்து வீடு திரும்பி  உள்ளனர். ஏற்கனவே 32 பபேரும் குணமடைந்து விட்டனர். தற்போது மருத்துவமனையில் 6 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ளவர்களில் 4 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அதில்  2 பேர் தாய்லாந்து குருமார்கள். இவர்கள் மீது வழக்கு உள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது. மேலும் இதுவரை 1800 பேர் வரை டெஸ்ட் எடுக்கப்பட்டு உள்ளதாகவும், 300 பேர் சோதனை முடிவுகள் இன்னும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

there is no news for last 2 days in erode

இந்த நிலையில் கடந்த 2 நாட்களில் எனது ஒரு புதிய நோய் தொற்றும் இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் டிஸ்சார்ஜ்  செய்யப்பட்டவர்கள் 14 தனிமைப்பட்டு கண்காணிக்கப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது 

இதற்கெல்லாம் காரணம் மாவட்ட ஆட்சியர் கதிரவன் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் கொடுத்து  மக்கள் நடமாட்டம் இல்லாமல் கண்காணித்து வந்துள்ளனர். இதன் மூலம் எவ்வளவு வேகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதோ அதே வேகத்தில் குறைந்தது உள்ளது கவனிக்கத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios