there is a change in tb drugs
காசநோய்க்கு புதிய சிகிச்சை முறையை மத்திய சுகாதார அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது.
இந்தியா முழுவதும் காசநோயால் பாதிக்கப் பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. ஆனாலும் முந்தைய ஆண்டுகளில் இருந்ததை விட தற்போது காசநோயின் தாக்கம் சற்று குறைந்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது
முன்பு
காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாரத்துக்கு மூன்று முறை மருந்து உட்கொள்ளும் முறை பின்பற்றப்பட்டு வந்தது.
fixed dose combination
பிக்சட் டோஸ் காம்பினேஷன் என்று அழைக்கப்படும் இந்த டிபி மருந்து கலவையை உட்கொள்ளும் முறைகளில் தற்போது மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
இதில் என்ன மாற்றம் தெரியுமா ?
வாரத்துக்கு மூன்று முறை என பின்பற்றப்பட்டு வந்த இந்த முறையில், தற்போது தினசரி மருந்தை உட்கொள்ளும் புதிய முறையை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு தினசரி மருந்தை உட்கொண்டு வந்தால்,காசநோயின் தாக்கம் குறைந்து வருவதாகவும்,பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
