சுர்ஜித் மறைந்த ஆழ்துளை கிணறு இவரோடது தான்..! வெளியானது அதிர்ச்சி தகவல்..! 

ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சுர்ஜித் குறித்த செய்தித்தாள் ஒரு வார காலமாக பார்க்க முடிந்தது. சுர்ஜித்தின் இழப்பு தமிழகத்திற்கு பேரிழப்பாக பார்க்கப்பட்டது. இந்த ஆண்டு தீபாவளி சோகமான தீபாவளியாக அமைந்துவிட்டது.

இந்த ஒரு நிலையில் வீட்டின் அருகே ஆழ்துளை கிணறு இருப்பதை மூடாமல் இருந்த அவர்களுடைய பெற்றோரை கண்டித்து சமூக வலைதளங்களில் மக்கள் கருத்து தெரிவித்து இருந்தனர். ஆனால் தற்போது ஆழ்துளை கிணறு பற்றிய புதுப்புது தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

சுர்ஜித்தின் அம்மா கல்யாண மேரி பேசும் போது, "இந்த ஆழ்துளை கிணறு விவசாயத்திற்காக நாங்கள் தோண்டவில்லை. சுஜித் தாத்தா காலத்திலிருந்தே அது இருந்துள்ளது. அப்போது என் கணவர் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நாங்கள் இந்த பகுதியில் 10 ஆண்டுகளாக தான் வசித்து வருகிறோம்" என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். 

சுர்ஜித்தின் தாத்தா தெரிவிக்கும்போது, "இந்த ஆழ்துளை கிணறு பற்றி என் மருமகளுக்கு தெரியாது.. என்னுடைய மகளுக்கும் தெரியாது.. இந்த இடம் என்னுடைய குடும்ப சொத்து. இந்த கிராமத்தில் மட்டும் மூன்று ஆழ்துளை கிணறுகளை வெட்டி உள்ளேன். 600 அடிக்கு மேல் தோண்டியும் தண்ணீர் வராததால் சாக்குப்பை கொண்டு இதனை மூடி இருந்தோம். பின்னர் இதன் மீது விவசாயம் செய்து கொண்டு வருகிறோம். அது சற்று பள்ளமான பகுதி என்பதால் சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக ஆழ்துளை கிணற்றின் மேல் பக்கம் திறந்து உள்ளது  என கண்கலங்கி பேசி உள்ளார்.