The transition from the Sagittarius Rasi to the world of the transition to Saturn

சனி பகவான் கடந்த 19 ம் தேதி, விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ந்துள்ளார். இதனால், ஒவ்வொரு ராசியிலும் ஏற்படுத்த போகும் மாற்றங்களை, பலரும் பலவிதமாக எழுதிவிட்டனர். இந்நிலையில், தனுசு ராசியில் அமர்ந்த சனி பகவான், உலக அளவில் ஏற்படுத்த போகும் மாற்றங்கள் பற்றி “ஜோதிட ரத்னா” நெல்லை வசந்தன் அவர்கள் கூறி இருப்பதை பார்ப்போம்.

தனுசு ராசியில் அமர்ந்த சனி பகவான், அங்கிருந்து தன்னுடைய மூன்றாம் பார்வையாக, கும்ப ராசியையும், ஏழாம் பார்வையாக மிதுன ராசியையும், பத்தாம் பார்வையாக கன்னி ராசியையும் பார்வை செய்கிறார்.

சனி பெயர்ச்சிக்கு முதல்நாளே, ரிஷப ராசிக்கு உரிய, அட்லாண்டா நகரில் மின்சார தடையை ஏற்படுத்தி, உலகின் மிகப்பெரிய, பிசியான அட்லாண்டா நகர் விமான போக்குவரத்துக்கு இடையூறை ஏறபடுத்தி விட்டார்.

உலகின் பிசியான விமான நிலையமான அட்லாண்டா விமான நிலையத்தில், ஒரு நாளைக்கு சுமார் 2500 விமானங்கள் வந்து செல்லும். இரண்டரை லட்சத்திற்கு மேலான பயணிகள் வந்து செல்லும் இடமாகும். இதுவரை இல்லாத அளவுக்கு அங்கு நிகழ்ந்த மின்சார வெட்டு, விமான நிலையத்தையே ஸ்தம்பிக்க செய்து விட்டது.

அதேபோல், அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில், தனியார் பங்களிப்புடன் முதன் முறையாக இயக்கப்பட்ட ரயில் ஒன்று தடம் புரண்டதால், மூன்று பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
வாஷிங்டன் ரயில் விபத்தின்போது, செவ்வாய் துலாமிலும், சனி விருச்சிகத்திலும் இருந்தது. அதாவது நெருக்கமாக இருந்தன. செவ்வாயும் சனியும் அடுத்தடுத்து இருந்தால் அது ரயில்வேயை குறிக்கும். அந்த வகையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இனி, சனி அமர்ந்த தனுசு, பார்வை செய்யும் கும்பம், மிதுனம், கன்னி ஆகிய ராசிகளில் இடம்பெறும் உலக நாடுகள், இந்திய மாநிலங்கள் மற்றும் தமிழக பகுதிகளை பார்ப்போம்.

ஜார்ஜியா, அட்லாண்டா போன்ற பகுதிகள் ரிஷப ராசியில் இடம் பெற்றுள்ளன.

தனுசு ராசியில் இடம் பெற்றுள்ள நாடுகள்: ஆஸ்திரேலியா, அரேபியா, பிரான்ஸ், மடகாஸ்கர், ஹங்கேரி, ஸ்பெயின், இத்தாலி, நேப்பிள்ஸ், ஸ்காட்லாந்து, லப்பீல்டு, சோலோன், போர்ட்லேன்ட்.

இந்திய பகுதிகள்: ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல் பிரதேசத்தின் வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு பகுதிகள்.

தமிழ்நாட்டில் கோவை, பொள்ளாச்சி, உடுமலை.
சென்னையில் கவர்னர் மாளிகையை சுற்றியுள்ள பகுதிகள், ஆதம்பாக்கம், தியாகராய நகர், மாம்பலம்.
கும்ப ராசியில் இடம் பெற்றுள்ள உலக நாடுகள்: கொரியா, அரேபியா, பிரஷ்யா, ரஷ்யா, லிதுவேனியா, போலந்து, சுவீடன், ஜப்பான், அசோனியா, ஊர்ஸ்பெக்.

இந்தியாவில், மேற்கு மற்றும் வடக்கு ராஜஸ்தான், மேற்கு பஞ்சாப்.

தமிழ்நாட்டில், சேலம், ஆத்தூர், ஏற்காடு.
சென்னையில், குரோம்பேட்டை, திரிசூலம்.

மிதுன ராசியில் இடம்பெற்றுள்ள உலக நாடுகள்: இங்கிலாந்து, மேற்கு அமெரிக்கா, வடகிழக்கு ஆப்ரிக்கா, வார்சினின், நியூரம்பர்க், பிளைமவுத், கீழ் எகிப்து, பெல்ஜியம், வேல்ஸ், கனடா, ஆர்மீனியா, சார்டினியா, நிமல்போர்ன், சான்பிரான்சிஸ்கோ.
இந்தியாவில், ஆந்திரா, வடக்கு மற்றும் மேற்கு தமிழ்நாடு, வடக்கு மற்றும் கிழக்கு கர்நாடகா.
தமிழ்நாட்டில், திருச்சி, தஞ்சாவூர், பட்டுகோட்டையின் சில பகுதிகள்.
சென்னையில், புரசைவாக்கம், ஜெமினி, எருக்கஞ்சேரி.

கன்னி ராசியில் இடம் பெரும் உலக நாடுகள்: துருக்கி, திபெத், கிரீஸ், சுவிட்சர்லாந்து, பிரேசில், வர்ஜீனியா, மேற்கு இந்திய தீவுகள், ஜெருசேலம், பாரிஸ், பாக்தாத், பாஸ்டன், லாஸ் ஏஞ்செல்ஸ்.

இந்தியாவில், மத்திய பிரதேசத்தின் மத்திய பகுதி, மகராஷ்ட்ராவின் கிழக்கு பகுதி.

தமிழ்நாட்டில், கன்னியாகுமரி, நாகர்கோயில், சென்னையில் திருவல்லிக்கேணி.

தனுசு ராசியில் சனி பகவான் அமர்ந்துள்ளதாலும், கும்பம், மிதுனம், கன்னி ஆகிய ராசிகளை பார்வை செய்வதாலும், மேற்கண்ட நாடுகள் மற்றும் பகுதிகளில் வசிப்போர், பொறுப்புடனும், கவனமுடனும் இருப்பது நல்லது.

இரட்டை நகர்களில் இந்த மாற்றம் தெளிவாக தெரியும்.

நல்லது செய்யப்போகும் அஷ்டம சனி....

கடந்த 2012 ம் ஆண்டு இறுதியில் துலாம் ராசிக்கு (ஆறாம் இடத்திற்கு) வந்த சனி பகவான், ரிஷப ராசிக்கு சரிவை ஏற்படுத்த தொடங்கிவிட்டார்.

வேலை, வருமானம், குடும்பம் அனைத்திலும் கடுமையான பாதிப்பை பலர் சந்தித்தனர். ஆனால், ஆறாம் இடத்திற்கு வரும் சனி பகவான் ரிஷப ராசிக்கு அள்ளி கொடுப்பார் என்று ராசிபலன் நாயகர்கள் எல்லாம் பழைய பஞ்சாங்கத்தையே பாடிக்கொண்டு இருந்தனர்.

அடுத்து, 2014 ம் ஆண்டு, ரிஷப ராசிக்கு ஏழாம் இடமான விருச்சிகத்திற்கு வந்த சனி பகவான், கண்ட சனியாக இருந்து, கொஞ்ச நஞ்சம் இருந்த நிம்மதியையும், நம்பிக்கையையும் இழக்க வைத்து விட்டார்.

அதனால், கடந்த ஐந்து ஆண்டுகளாக சனி பகவானால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் ரிஷப ராசிக்காரர்கள்.

தற்போது அஷ்டம சனி, பாடாய் படுத்தும் என்று, பல ஜோதிடர்கள் ரிஷப ராசிக்காரர்களை மேலும் பயமுறுத்தி வருகின்றனர்.

உண்மையில் ரிஷப ராசிக்கு அஷ்டம சனி என்பது, நன்மையை மட்டுமே செய்யும். தற்போது தனுசிற்கு வந்துள்ள சனி, மூன்றாம் பார்வையாக, தொழில் ஸ்தானமான கும்பத்தை பார்ப்பதால், இதுவரை வேலை இல்லாமல் அவஸ்தை பட்டவர்களுக்கு இனி வேலை கிடைக்கும்.

தொழிலில் கடும் நெருக்கடியை சந்தித்தவர்கள், அதில் ஒரு நல்ல மாற்றத்தை சந்திப்பார்கள். கடந்த ஐந்து வருடமாக பட்ட கடன்களை எல்லாம், வரும் இரண்டரை ஆண்டுகளில் அடைக்க முடியும்.

ஆனால், உணவு, தூக்கம் பாராமல் கடுமையாக உழைக்க வேண்டிய நிலையை, சனி பகவான் தருவார், உழைப்பின் அடையாளமான காளை சின்னத்தை, ராசியாக கொண்ட ரிஷப ராசி காரர்களுக்கு, வேலை இல்லாமல் இருப்பதுதான் கஷ்டம். எப்போதும் உழை ப்பது அவர்களுக்கு சந்தோஷம்.

எனவே ரிஷப ராசி காரர்கள், அஷ்டம சனியை கண்டு அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. எழுந்து நின்று, சனி பகவானுக்கு வரவேற்பு கொடுங்கள்.

நீங்கள், இழந்ததை அவர் மீட்க வைப்பார். உங்களுக்கு தடை பட்ட தொழிலையும், வருமானத்தையும் மீண்டும் தந்து, கடன்களில் இருந்து, மீட்டெடுப்பார்.