the star moola will affect the marriage ?
பொதுவாகவே திருமணம் என்றால், பொருத்தம் பார்ப்பது உண்டு.அதிலும் மணமகளுக்கு எந்த நட்சத்திரம்? தோஷம் எதாவது இருக்குமா ? என பல கேள்விகள் எழும் . இதற்கெல்லாம் பதில் ஜாதகம் பார்ப்பது. அதில் எதிர்பார்க்கப் பட்ட பொருத்தம் இருந்தால், திருமணம் செய்து வைக்க பெரியோர்கள் விருப்பம் தெரிவிப்பார்கள் .
அதுவே பெண்ணுக்கு மூலம் நட்சத்திரம் என்றால், கண்டிப்பாக அந்த திருமணம் நடைப்பெறுமா? என்றால் சற்று கேள்வி குறியாகவே தான் இருக்கும் . அதாவது அப்பெண்ணிற்கு திருமணம் நடைபெறாது என்று அர்த்தம் அல்ல. ஆனால் அதே போன்று மூலம் நட்சத்திரம் உள்ள மணமகனையோ அல்லது வேறு நட்சத்திர மண மகனுக்கு தான் , அப்பெண்ணை திருமணம் செய்து வைப்பர்.
மூலம் என்றால் என்ன ? எந்த பாதத்தில் இருந்தால் யாருக்கு என்ன தோஷம் ?
மூலம் 1,2,3, பாதம்( பெண் ) – மாமனாருக்கு தோஷம்
கேட்டை1,2,3 பாதம் - கணவரின் மூத்த சகோதருக்கு தோஷம்
விசாகம் 4 ஆம் பாதம் – கணவரின் இளைய சகோதரருக்கு தோஷம்
ஆயில்யம் 2,3,4 ஆம் பாதம் - மாமியாருக்கு தோஷம்
மூலம் நட்சத்திரம் கண்டிப்பாக ஆண்களுக்கு பொருந்தாதாம். அதாவது ஒரு ஆணுக்கு மூலம் நட்சத்திரம் என்றால், அதனால் பெண்ணின் தகப்பனாரை பாதிக்காதாம்.
இந்த ஐதீகத்தை வேதங்கள் கூறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
