தேர்ந்தெடுக்கப்பட்ட"பிப்ரவரி 19 "ஆம் தேதி..! 

எப்படியோ... நினைத்த படியே நடக்கிறது என பெரும் குஷியாக உள்ளது அதிமுகவும் பாஜகவும்... தமிழக பாஜக தலைவர் டாகடர் தமிழிசை சொல்வது போலவே, "தமிழகத்தில் பலமான கூட்டணி வைப்போம்" என சொல்லி சொல்லியே, சரியான நேரத்தில் சரியாக காய் நகர்த்தி பலமான கூட்டணி அமைய அஸ்திவாரம் போட்டு, அதன் படி நேற்று அதிமுக-பாமக, அதிமுக-பாஜக கூட்டணி நல்ல முறையில் முடிந்து அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

அதெல்லாம் சரி .. அது என்ன நேற்று ஒரே நாளில், இரு கட்சிகளுடனான கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி அறிவிப்பு வெளியிட்டதே அதிமுக என யோசிக்க வைக்கும் அல்லவா..?

அதன் ரகசியம் இதோ...!

அதிமுக தொண்டர்களால் நிரந்தர பொதுச்செயலாளராக கருதப்படும் மறைந்த ஜெயலலிதாவின் பிறந்தநாள் நட்சத்திரமான ராசி மகம் மற்றும் பவுர்ணமியும் இணைந்து ஒரே நாளில் அதாவது நேற்றைய தினம் வந்ததால் அந்த நாள் ராசியாக அமையும் என கருதப்பட்டு அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நேற்று இதனைத் தேர்ந்தெடுத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அவர்கள் விருப்பப்படியே அதிமுக கூட்டணி பேச்சு வார்த்தையும் சுமூகமாக நடந்து வெற்றிகரமாக கூட்டணி அமைந்து விட்டது. இதன் மூலம் தமிழகத்தில் பலமான வெற்றி கூட்டணி உருவாகி இருப்பதாக அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.