சூரிய கிரகணங்களில் வெளிவரும் அபரிதமான ஆற்றல்..! பிரமிடு முன் நின்று கைகளை உயர்த்தினால் நடக்கும் அதிசயம்..!
மெக்சிகோவில் உள்ள புகழ் பெற்ற சூரிய பிரமிட்டை காண இப்போதே ஏராளமான சுற்றுலா பயணிகள் படை எடுக்க தொடங்கி உள்ளனர்.
மெக்சிகோவில் உள்ள புகழ் பெற்ற சூரிய பிரமிட்டை காண இப்போதே ஏராளமான சுற்றுலா பயணிகள் படை எடுக்க தொடங்கி உள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் வரும் போது, சூரிய பிரமிட்டை காண உலக அளவில் இருந்து சுற்றுலா பயணிகள் இந்த இடத்திற்கு வர ஆர்வம் காட்டுவார்கள். காரணம் அத்தகைய சிறப்பு மிக்க ஆற்றல் இந்த இடத்தில் கிடைப்பதே முழு காரணம் என அனுபவ பூர்வமாக சிலர் சொல்கின்றனர்.
சூரிய பிரமிட்டுக்கு அருகில் நிற்கும் போது சூரியனின் கிரகணங்களில் வெளிவரும் அபரிதமான ஆற்றலை பெற பிரமிட்டின் உச்சியில் ஏறி கைககளை உயர்த்தி விரித்து வணங்குவதை ஒரு மரபாகவே வைத்துள்ளார்.
இங்கு சென்றால் மனிதர்கள் கடவுள்களாக மாறும் அளவிற்கு ஆன்மீக சிந்தனை மேலோங்கி நிற்குமாம். அதுமட்டுமல்லாமல், இந்த ஆற்றல் மூலம் மனிதனின் உடலில் ஒரு வித்தியாசமான சக்தி ஏற்படுகிறதாம்.
சூரிய ஒளியைப் பெறும் வகையில் இந்த பிரமிட் மலைவடிவில் கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது