Asianet News TamilAsianet News Tamil

தும்மலை அடக்க முயன்ற நபர்.. பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்..

34 வயதான அவர் வாயை மூடிக்கொண்டு நாசியைத் தடுப்பதன் மூலம் தும்மலை அடக்க முயன்றார் என்றும், இதன் விளைவாக தொண்டை அழற்சி ஏற்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The person trying to suppress the sneeze.. Then the shocking incident happened..
Author
First Published Aug 15, 2023, 12:09 PM IST

இங்கிலாந்தை சேர்ந்த ஒரு நபர் தும்மலை அடக்க முயன்றதால், அவரின் தொண்டையில் துளை ஏற்பட்டுள்ளது. BMJ என்ற மருத்துவ இதழில் இந்த நபர் குறித்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. 34 வயதான அவர் வாயை மூடிக்கொண்டு நாசியைத் தடுப்பதன் மூலம் தும்மலை அடக்க முயன்றார் என்றும், இதன் விளைவாக தொண்டை அழற்சி ஏற்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது இறுதியில் தொண்டையில் துளை ஏற்பட வழிவகுத்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குரல்வளை, அல்லது தொண்டை என்பது சுவாச மற்றும் செரிமான அமைப்பின் ஒரு பகுதியாகும், இது மூக்கு மற்றும் வாயிலிருந்து காற்று, உணவு மற்றும் திரவத்தை கொண்டு செல்கிறது. தொண்டை புண் மற்றும் டான்சில்லிடிஸ் உள்ளிட்ட பொதுவான நோய்களின் தளம் பொதுவாக குரல்வளை ஆகும்.

துளை எப்படி உருவானது?

மருத்துவர்களின் கூற்றுப்படி, குரல்வளை எளிதில் சிதைவோ அல்லது பாதிப்போ அடையாது. ஆனால் மீண்டும் மீண்டும் வாந்தி, இருமல் அல்லது வெளிப்புற காயம் ஆகியவற்றால் சிராய்ப்பு ஏற்படலாம். இருப்பினும், இந்த நபரின் விஷயத்தில்,  காற்று குமிழ்கள் அவரது மார்பின் திசு மற்றும் தசைகளில் படிய தொடங்கின, இதனால் கழுத்து முழுவதும் உறுத்துவது போல் உணர்வு ஏற்பட்டுள்ளது. மேலும் விலாவில் வெடிக்கும் சத்தம் ஏற்பட்டது என்பதை அறிந்து மருத்துவர்கள் குழப்பமடைந்தனர். வலியைத் தவிர, அவருக்கு தொண்டைப் பகுதியிலும் தொற்று ஏற்பட்டது. எனினும் நோய்த்தொற்றைக் குறைக்கும் ஆண்டிபயாடிக்குகளின் உதவியுடன் அவர் இப்போது நலமாக உள்ளார்.

அசைவம் சாப்பிடாமலே எலும்புகளை வலுப்படுத்தலாம்.. இந்த 7 சைவ உணவுகளை சாப்பிட்டால் போதும்..

நாம் ஏன் தும்முகிறோம்?

அழுக்கு, புகை அல்லது தூசி போன்ற துகள்கள் நாசிக்குள் நுழைந்து எரிச்சலை உண்டாக்கும்போது அதனை மூக்கில் இருந்து வெளியேற்ற உங்கள் உடல் பயன்படுத்தும் ஒரு பொறிமுறையாக தும்மல் ஏற்படுகிறது. இது நிகழும்போது, ​​உங்கள் உடல் தும்மலை ஏற்படுத்துகிறது. வெளியில் இருந்து உடலுக்குள் நுழையும் பாக்டீரியா உள்ளிட்ட கிருமிகளை வெளியேற்ற தும்மல் முதல் படியாகும்.

தும்மல் பிரச்சனையா?

பருவமழை காலத்தில் தொடர்ந்து தும்மல் ஏற்படுவது தொந்தரவாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.  இருப்பினும், தும்மல் என்பது பொதுவாக தீவிரமான எந்த நோயின் அறிகுறியும் இல்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். ஆராய்ச்சியின் படி, எனினும் குறிப்பிட்ட நோய்கள் உள்ளவர்கள் அதிகமாக தும்மினால் அவர்களுக்கு சிக்கல் ஏற்படலாம். ஒரு சில தும்மல்கள் கவலையளிக்கும் அறிகுறியாக இல்லாவிட்டாலும், அடிக்கடி தும்மல் ஏற்படும் போது மருத்துவ உதவி நாடுவது அவசியம் என்று நிபுணர்கள் ஆலோசனை கூறுகிறார்கள்.

மறுப்பு: கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள உதவிக்குறிப்புகள் மற்றும் பரிந்துரைகள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே மற்றும் தொழில்முறை மருத்துவ ஆலோசனையாக கருதப்படக்கூடாது. எந்தவொரு உடற்பயிற்சி திட்டத்தையும் தொடங்குவதற்கு முன் அல்லது உங்கள் உணவில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன் எப்போதும் உங்கள் மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரை அணுகவும்.

Follow Us:
Download App:
  • android
  • ios