Asianet News TamilAsianet News Tamil

வெறும் வயிற்றில் எதையெல்லாம் சாப்பிட கூடாது? இதோ லிஸ்ட்...

The foods that will not taken at empty stomach
The foods that will not taken at empty stomach
Author
First Published Jun 1, 2017, 11:20 AM IST


 

 

காலை உணவை கட்டாயம் சாப்பிடுவது அன்றைய பொழுதை புத்துணர்ச்சியுடன் தொடங்குவதற்கு வழிவகுக்கும். அதேவேளையில் உணவை உட்கொள்வதற்கு முன்பாக வெறும் வயிற்றில் ஒருசில உணவு பதார்த்தங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் தேவையற்ற உடல் உபாதைகள் ஏற்படும். வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடிய மற்றும் சாப்பிடக்கூடாத உணவு வகைகள் குறித்து பார்ப்போம்.

* காலையில் எழுந்ததும் டீ, காபி பருகும் பழக்கத்தை பெரும்பாலானவர்கள் வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள். ஆனால் வெறும் வயிற்றில் டீயோ, காபியோ பருகுவது தவறான பழக்கம். அதில் உள்ள ‘காபின்’ வயிற்று உபாதைகள் தோன்ற வழிவகுத்துவிடும். குமட்டல், இரைப்பை அழற்சி போன்ற அசவுகரியங்களை உண்டாக்கும். அதனால் காபி குடிப்பதற்கு முன்பாக காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் பருகுவது நல்லது.

* வெறும் வயிற்றில் சாக்லேட், சுவீட்கள் போன்ற இனிப்பு பலகாரங்களை சாப்பிடக்கூடாது. அவை இன்சுலின் அளவை அதிகப்படுத்திவிடும்.

Image result for tea coffee with chocolate* வெறும் வயிற்றில் தயிர் சாப்பிடக்கூடாது. அதில் இருக்கும் நல்ல பாக்டீரியா நொதித்து வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடும்.

* பொதுவாகவே வெறும் வயிற்றில் மாத்திரை சாப்பிடக்கூடாது. அது வயிற்றில் உள்ள அமிலத்துடன் கரைந்து வயிற்று படலத்தை அரிக்க தொடங்கிவிடும். தேவையற்ற உடல் உபாதைகள் உண்டாக காரணமாகிவிடும். டாக்டர் பரிந்துரைத்தால் வெறும் வயிற்றில் மாத்திரை சாப்பிடலாம்.

* வாழைப்பழத்தில் மக்னீசியம் அதிகம் இருக்கிறது. அதனை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால் அதிக அளவில் மக்னீசியம் ரத்தத்தில் கலந்துவிடும். அது சிலரது உடலுக்கு ஒத்துக்கொள்ளாது.

* எப்போதுமே தக்காளியை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. அதில் இருக்கும் டான்னிக் அமிலம் இரைப்பையில் சுரக்கும் அமிலத்துடன் இணைந்து பாதிப்பை ஏற்படுத்திவிடும். குறிப்பாக அல்சர் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

* காரமான உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் வயிற்றில் உள்ள அமிலத்துடன் காரம் சேர்ந்து கடுமையான எரிச்சலை ஏற்படுத்தி விடும். செரிமான கோளாறுகளும் உண்டாகக்கூடும்.

Follow Us:
Download App:
  • android
  • ios