tender coconut water in bottles
தமிழகத்தில் விற்கப்படும் குளிர்ப்பானங்களுக்கு வேட்டு வைக்கும் விதமாக தற்போது விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது .இதனை தொடர்ந்து தற்போது அதற்கு மாறாக தமிழகத்தில் குறிப்பாக பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் அதிகளவில் தென்னை மரம் இருப்பதால் , இளநீர் விற்பனைஅமோகமாக உள்ளது .
கோடை காலத்தில் குளிர்பானங்கள் தேவைப்படுவது வழக்கம். ஆனால் தற்போது ஜல்லிக்கட்டு போரட்டத்தின்போது, பன்னாட்டு குளிர்பானங்களுக்கு தடைவிதிக்க வேண்டும் என குரல் எழுந்தது . அதற்கு வியாபாரிகள் சங்கம் ஆதரவு தெரிவித்து மார்ச் 1 ஆம் தேதி முதல் பெரும்பாலான கடைகளில் குளிர்பானங்கள் விற்பனை தடை செய்துள்ளது.
இதனை தொடர்ந்து விவசாயிகள் ஒன்றாக இணைந்து ஒரு கூட்டு முயற்சியாக இளநீரை பாட்டிலில் அடைத்து விற்க முடிவு செய்துள்ளனர்.இதனை மளிகை கடைகள் மூலமாக விற்க திட்டமிடப்பட்டுள்ளது
தமிழகத்தில் பொள்ளாச்சி உடுமலை உள்ளிட்ட பகுதிகள் தான் தென்னை மரம் அதிகம் நிறைந்த பகுதியாகும்.இங்கிருந்து பெறப்படும் இளநீருக்கு எப்பொழுதும் மவுசு அதிகம் தான்.
இளநீர் எப்பொழுதும் உடல் நலத்திற்கு ஏற்ற ஒன்று என்பதாலும் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்க வழிவகை செய்வதற்கு கிடைத்த ஒரு காரணியாகவும் இது
