பிரதமர் மோடிக்கு கோவில்..! அரசியலை தாண்டி "மோடி ஒரு நல்ல மனிதர்"..! பாஜகவினரையே மெர்சலாக்கிய விவசாயி..! 

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதிக்கு அருகே உள்ள எரக்குடி என்ற கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவர் பிரதமர் நரேந்திர மோடியின் மீது கொண்டுள்ள பற்று காரணமாக அவருடைய சொந்த செலவில் மோடி சிலை வைத்து கோவில் கட்டி வழிபாடு நடத்தி வருகிறார் 

அதன்படி எரக்குடியில் உள்ள அவருடைய விவசாய தோட்டத்தில் மோடியின் கோவிலுக்கு பால் அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டி வருகிறார். விவசாய சங்க தலைவராகவும் இருந்து வரும் சங்கர் பாரதிய ஜனதா கட்சியின் தீவிர தொண்டர் என்பது குறிப்பிடத்தக்கது

இதுகுறித்து ஷங்கர் தெரிவிக்கும்போது, "கடந்த எட்டு மாதங்களாக இந்த கோவிலை கட்டி வருகிறேன். இந்த கோவிலை திறப்பதற்கு கட்சியின் பல மூத்த தலைவர்களை அழைத்து திறக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை... மேலூர் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பது என்னுடைய லட்சியம்... கட்சியை  தாண்டி தாண்டி பிரதமர் மோடி ஒரு நல்ல மனிதர். அவர் மீது கொண்ட பற்று காரணமாக அவருக்கு சிலை அமைத்து வழிபாடு செய்ய விருப்பம் இருந்தது" என தெரிவித்து உள்ளார்.