தெலுங்கானாவை தெறிக்கவிடும் "தமிழிசை'...! கிரண்பேடியை ஓவர்டேக் செய்து தடாலடி..!  

மக்கள் குறைகளை நேரடியாக கேட்டறியும் வகையில் "மக்கள் சந்திப்பு" நிகழ்ச்சியை நடத்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் முடிவெடுத்திருப்பது அம்மாநில அரசியல் வட்டாரத்தில் ஒருவிதமான பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் பதவி காலம் முடியும் தருவாயில் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதன் மூலம் கட்சி பணியில் இருந்து அரசு பணிக்கு மாறியுள்ளார் தமிழிசை. "மஜ்லீக் பச்சோ தெரிக்"  அமைப்பின் தலைவர் தனது ட்விட்டர்  பக்கத்தில் மக்களின் குறைகளை கேட்டறியும் வகையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக ஏற்கனவே இது குறித்து பரிசீலனை செய்து வருவதாக தமிழிசை பதிலளித்துள்ளார். மேலும் இவருடைய பரிந்துரைக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார். இந்த ஒரு விஷயம் தெலுங்கானா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே ஒரு மாநிலத்தின் அதிகாரத்தில் ஆளுநர் தலையிட கூடாது என்ற நிலை ஒரு பக்கம் இருக்க... மற்றொரு பக்கம் பாண்டிச்சேரி ஆளுநர் கிரண்பேடியின் தலையீடு புதுவை அரசு தலையீட்டில் அதிகமாக உள்ளது என பெரும் பனிப்போரே நிகழ்ந்து வருகிறது மற்றோரும் பக்கம்...

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழிசை நேரடியாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருந்தது அம்மாநில அரசியலில் ஒருவிதமான பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.