Asianet News TamilAsianet News Tamil

தூக்கிலிட ஆள் இல்லையா..? நான் இருக்கிறேன்.. வீறு கொண்ட சிங்கமாய் எழுந்த தமிழக போலீஸ்..!

கடந்த 2012ஆம் ஆண்டு நிர்பயா என்ற மருத்துவ மாணவி பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது 6 நபர்கள் கூட்டாக சேர்ந்து ஓடும் பேருந்திலேயே பலாத்காரம் செய்யப்பட்டு கொடுமையாகக் கொல்லப்பட்டார். 

tamilnadu police subash accepted to implement punishments for nirbaya case accused
Author
Chennai, First Published Dec 7, 2019, 4:37 PM IST

தூக்கிலிட ஆள் இல்லையா..? நான் இருக்கிறேன்.. வீறு கொண்ட சிங்கமாய் எழுந்த தமிழக போலீஸ்..!

நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட தான் தயாராக இருப்பதாக சிறை அதிகாரிகளுக்கு ராமநாதபுரத்தை சேர்ந்த தலைமைக் காவலர் ஒருவர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு நிர்பயா என்ற மருத்துவ மாணவி பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது 6 நபர்கள் கூட்டாக சேர்ந்து ஓடும் பேருந்திலேயே பலாத்காரம் செய்யப்பட்டு கொடுமையாகக் கொல்லப்பட்டார்.  நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய அந்த தருணத்தில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா தாகூர் மற்றும் 16 வயதுடைய ஒரு சிறுவனையும் கைது செய்தனர்.

tamilnadu police subash accepted to implement punishments for nirbaya case accused

16 வயது என்பதால் அவனுக்கு அதிகபட்சமாக 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ராம் சிங் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். மற்ற நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை விதித்தது நீதிமன்றம். இதற்கிடையில் திகார் சிறையில் தூக்கு தண்டனையை நிறைவேற்ற ஆள் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளதால், அந்த பணியை செய்யத் தயார் என ராமநாதபுரத்தை சேர்ந்த தலைமைக் காவலர் சுபாஷ் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

tamilnadu police subash accepted to implement punishments for nirbaya case accused

அதன்படி அவர் எழுதிய கடிதத்தில், நிர்பயா வழக்கில் தண்டனை பெற்ற 4 பேரை தூக்கில் இட திகார் சிறையில் ஆளில்லை என்ற தகவல் வெளியானது. ஆனால் அவர்களுடைய தண்டனையை நிறைவேற்ற நான் தயாராக இருக்கிறேன்" என சிறை அதிகாரிகளுக்கு கடிதம் ழுதி உள்ளார் 

tamilnadu police subash accepted to implement punishments for nirbaya case accused

இவர், பிணங்களை அடக்கம் செய்வது, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வது என தன்னுடைய சேவையை தொடர்ந்து செய்து வந்துள்ளார். இதற்கு முன்னதாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களிடம் அண்ணா பதக்கம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios