வெயில் அதிகமாக இருப்பதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது இல்லை என தமிழக அரசு சார்பாக அளிக்கப்பட்டு ஐகோர்ட்டில் பதில் அளிக்கப்பட்டு உள்ளது

கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த கோரிய பொதுநல வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு இவ்வாறு பதில் அளித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி "வெயில் அதிகமாக இருப்பதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது இல்லை, இரு சக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் அணிவது குறித்து பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்" என தெரிவித்து உள்ளது தமிழக அரசு.

 

இதனைத் தொடர்ந்து ஜூன் 6ஆம் தேதி போக்குவரத்து இணை ஆணையர் மற்றும் துணை ஆணையர் நேரில் ஆஜராகி இது குறித்து விளக்கமளிக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது