அரசு அதிரடி..! புது VAO களுக்கு வாய்ப்பு இல்லை..! ஓய்வு பெற்ற VAO களுக்கு அடித்தது அதிர்ஷ்டம்..! 

தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் காலியாக உள்ள 2896 விஏஓ பணியிடங்களை ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை கொண்டே நிரப்பலாம் என தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கடந்த பெப்ரவரி மாதம், அரசாணையும் வெளியிட்டு இருந்தது. 

அதன் ஒரு பகுதியாக தற்போது மாதம் ரூபாய் 15,000 தொகையில் தொகுப்பூதிய அடிப்படையில் ஓராண்டுக்கு அல்லது தேவைப்படும் காலம் வரை அவர்களே பணியில் தொடரலாம் என ஒரு வரையறை கொண்டுவரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தேர்வு எழுதி கிராம நிர்வாக அலுவலர் வேலையை பெற காத்திருக்கும் இளைஞர்களுக்கு இது ஒரு பெரிய இடியாக அமைந்துள்ளது காரணம் ஏற்கனவே ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை கொண்டு தொகுப்பூதியத்தின் அடிப்படையில் மாதம் ரூபாய் 15,000 கொடுத்து வேலையில் அமர்த்துவதால், இளைஞர்களுக்கு அரசு வேலை கிடைக்காமல் போகக் கூடிய சூழல் உருவாகி உள்ளது என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதே சமயத்தில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது