டெல்லியில் அசிங்கப்பட்ட தமிழச்சி தங்கபாண்டியன்..! விவரம் தெரியாமல் வசமாக சிக்கிக்கொண்ட திமுக எம்.பி ..! 

எந்த சாலை, யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என தெரியாமல் மத்திய அமைச்சரிடம்  மனு கொடுத்து உள்ளார் திமுக எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன். இவருடைய இந்த செய்கையால் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கிண்டல் செய்து உள்ளனர் 

தமிழகத்தில் மட்டும் 5300 கி.மீக்கும் மேல் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 46 இடங்களில் சுங்கச்சாவடிகள் உள்ளன. மேலும் மாநில நெடுஞ்சாலைத் துறையின் கீழ் சென்னை, ராஜிவ்காந்தி சாலை, கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை பராமரிக்கப்பட்டு வருகிறது.இந்த சாலையில் சுங்க சாவடி அமைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த பணத்தை வைத்து சாலை புனரமைக்கவும், மேம்பாட்டு பணிக்காகவும் மாநில நெடுஞ்சாலைத்துறை பயன்படுத்தி வருகிறது. 

இந்த நிலையில் இந்த சாலையில் உள்ள குறிப்பிட்ட ஐந்து சுங்க சாவடிகளில் வாகனங்கள் கட்டணம் செலுத்த 30 நிமிடங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டிய நிலை இருக்கின்றது. எனவே இதனை அகற்ற வேண்டும் என அடங்கிய கோரிக்கை மனுவை தென்சென்னை திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் நேற்றுமுன்தினம் டெல்லி சென்று மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியிடம் கொடுத்தார்.

பின்னர் இந்த தகவல் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் மூலம் தமிழக பிரிவுக்கு தெரியபடுத்தப்பட்டுள்ளது. இதனை அறிந்த தமிழக அதிகாரிகள் கிண்டல் செய்து சிரித்தனர். இது குறித்து பேசிய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர், "தென்சென்னை எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் கொடுத்துள்ள கோரிக்கை மனுவை பார்த்தோம். அவர் குறிப்பிட்டுள்ள அந்த ஐந்து சுங்கச்சாவடிகளும் மாநில நெடுஞ்சாலை துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதனை அகற்ற வேண்டும் என்றால் அணுக வேண்டியது தமிழக அரசை தான்.

தமிழச்சி நன்கு படித்தவர். ஆனால் எந்த சாலை யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று கூட தெரியாமல் மத்திய அமைச்சரிடம் மனு கொடுத்துள்ளதை நினைக்கும்போது வேடிக்கையாக உள்ளது என தெரிவித்து உள்ளார். மேலும் தமிழச்சி தங்கபாண்டியன் குறிப்பிட்டுள்ள இந்த சாலைகள் அனைத்தும் திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டது என்பதையும்  அவர் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட இந்த தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள குறிப்பிட்ட 5 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என ஒரு திமுக எம்பியே மத்திய அமைச்சரிடம் அணுகிய விதம் அனைவரையும் சிந்திக்கவும் வைத்துள்ளது.. சிரிக்கவும் வைத்துள்ளது..