Tamil serial trp rating: சன் டிவி தொடர்கள் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் நான்கு இடத்தில் உள்ளது. சமீப காலமாக விஜய் டிவி சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங்கில் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

சன் டிவி தொடர்கள் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் நான்கு இடத்தில் உள்ளது. சமீப காலமாக விஜய் டிவி சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங்கில் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

குடும்ப பெண்களின் மத்தியில், சீரியல்கள் மிகவும் பிரபலம். அப்படி, வெளிவரும் சீரியல்களில் சில மக்கள் மனதில் நீங்க இடம் பிடிப்பவை.சில சீரியல்கள் அவர்கள் வாழ்க்கையோடு ஒன்றாக கலந்து நடைபோடுபவை. 

வழக்கமாக சன் டிவி தொடர்கள் மற்றும் விஜய் டிவி தொடர்கள் இடையே தான் அதிகம் போட்டி இருந்து வருகிறது. இதில் பெரும்பாலும் டாப் 5 ரேட்டிங்கை எடுத்துக்கொண்டால், விஜய் மற்றும் சன்டியின் அதிக்கம் சமளவில் தான் இருந்து வந்தது. ஆனால் சமீப காலமாக விஜய் டிவி சீரியல்கள் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. அதிலும் டிஆர்பியில் தனி இடத்தை பெற்று வந்த பாரதி கண்ணம்மா தற்போது இறக்கத்தை சந்தித்துள்ளது.

இந்நிலையில், கடந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் விவரங்கள் தற்போது வெளிவந்திருக்கிறது.

அதில் வழக்கம்போல சன் டிவியின் ''கயல்'' சீரியல் 10.63 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து இருக்கிறது. சமீபத்தில் தொடங்கப்பட்ட இந்த சீரியல் தொடக்கத்தில் இருந்தே டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வருகிறது. இரண்டாம் இடத்தில் 9.82 புள்ளிகளுடன் வானத்தைப்போலதொடர் பெற்றுள்ளது. அண்ணன் - தங்கை பாசத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதை பாசமலரையே மிஞ்சும் அளவிற்கு ஓவர் ஆக்டிங் காட்சிகள் இடம் பிடித்ததால் ஹிட் அடித்துள்ளது.

மூன்றாம் இடத்தை சுந்தரி சீரியல்கள் பெற்று இருக்கின்றன. சமீபத்தில், தன் மனைவி கருப்பாக இருந்ததால், இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு இரண்டு மனைவிகளை சமாளிக்கும் கணவரை, மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட சுந்தரி சீரியல் ட்ரெண்டிங்கில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

அதற்கடுத்த இடங்களில் ரோஜா மற்றும் ராஜா ராணி ஆகிய சீரியல்கள் இருக்கின்றன. 6-வது இடத்தில், கண்ணான கண்ணே, 7-வது இடத்தில் பாரதி கண்ணம்மா, 8-வது இடத்தில் பாக்யலட்சுமி, 9-வது இடத்தில், பாண்டியன் ஸ்டோர்ஸ், 10-வது இடத்தில், காற்றுக்கென்ன வேலி ஆகிய தொடர்கள் இடம்பிடித்துள்ளன.

View post on Instagram

5 லிஸ்டில் விஜய் டிவி ஐந்தாவது இடத்தை மட்டுமே பிடித்து இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு டிஆர்பி யில் முதலிடத்தில் இருந்த பாரதி கண்ணம்மா தற்போது 8.36 புள்ளிகள் மட்டுமே பெற்று ஏழாம் இடம் மட்டுமே பிடித்து இருக்கிறது.

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷ்னி ஹரிப்பிரியன் மாற்றம் செய்யப்பட்டது தான் இதற்கு காரணம் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.