10 நிமிஷம் தான்.. இனி Table Fan கிளீன் பண்றது ரொம்பவே ஈஸி..!!

Table Fan Cleaning Hacks in Tamil : வீட்டில் இருக்கும் டேபிள் பேனை சுத்தம் செய்ய இந்த குறிப்புகளை மட்டும் நீங்கள் பின்பற்றினால் போதும். எளிதாக சுத்தம் செய்து விடலாம்.

table fan cleaning hacks easy tips and tricks to clean table fan  at home in tamil mks

வீடு தூய்மையாக இருந்தால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். எனவே, வீட்டின் அழகை பராமரிக்க ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் சுத்தம் செய்வது மிகவும் அவசியம். ஏனெனில், சில சமயங்களில் ஏதேனும் ஒரு பொருள் அழுக்காக இருந்தால், அது வீட்டின் அழகை முற்றிலும் பாதிக்கும்.

குறிப்பாக, எலக்ட்ரானிக் பொருட்களை பற்றி பேசினால் அவைகளுக்கு அதிக பராமரிப்பு தேவைப்படுகிறது. எலக்ட்ரானிக் பொருட்கள் சரியாக சுத்தம் செய்யாவிட்டால், அவை மிகவும் விரைவாக சேதம் அடைந்து விடும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் வீட்டில் வைத்திருக்கும் டேபிள் பேன் மிக விரைவாக அழுக்காகி விடும் அவற்றை அகற்றுவது மிகவும் கடினம். ஆனால் அதற்காக நீங்கள் கவலைப்பட தேவையில்லை. சில எளிய உதவி குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதன் உதவியுடன் உங்கள் வீட்டில் இருக்கும் டேபிள் பேனை எளிதாக சுத்தம் செய்யலாம்.

இதையும் படிங்க:  Cleaning Tips : சீலிங் ஃபேனை 5 நிமிடத்தில் சுத்தம் செய்ய சிம்பிள் டிப்ஸ் இதோ..!!

டேபிள் பானை சுத்தம் செய்வது எப்படி?

டேபிள் பேனை சுத்தம் செய்வதற்கு முன் அதன் பிளாக் ஸ்விட்சுடன் உடன் இணைக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். காரணம், பாதுகாப்பு மிகவும் அவசியம்.   எனவே மின் இணைப்பை துண்டித்து விடுங்கள். அதன் பிறகு டேபிள் பேனை கழட்டவும். இப்போது, வெதுவெதுப்பான நீரில் ஒரு துளி வெள்ளை வினிகர் கலந்து அந்த நீரில் ஒரு துணியை போட்டு சிறிது நேரம் வைக்கவும். பிறகு துணியை பிழிந்து டேபிள் பேனை சுற்றியுள்ள அழுக்குகளை நன்கு சுத்தம் செய்யவும். ஒருவேளை துணியால் அழுக்கை முழுமையாக சுத்தம் செய்ய முடியாவிட்டால், வேஸ்ட் பிரஷ்யை பயன்படுத்தலாம். ஆனால், நீங்கள் பேனை சுத்தம் செய்யும் போது மெதுவாக செய்யவும். நீங்கள் அழுத்தம் கொடுத்து செய்தால் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க:  வெறும் 10 நிமிடத்தில் பாத்ரூமை பளபளப்பாக மாற்றலாம்.. இதை செய்தால் போதும்.. சூப்பர் டிப்ஸ் இதோ..

இப்போது டேபிள் பேனில் மோட்டார் மற்றும் கிரில்லை ஈரமான துணியால் சுத்தம் செய்யுங்கள். இதற்கு நீங்கள் ஒரு கிளீனர் அல்லது  டூத் பிரஷை பயன்படுத்தலாம். பிறகு அனைத்தையும் எடுத்து வெயிலில் சிறிது நேரம் காய வைக்க வேண்டும். இப்போது எல்லா பொருட்களையும் வீட்டிற்குள் கொண்டு வந்து அவற்றை ஒரு சுத்தமான துணியால் துடைத்துவிட்டு பிறகு ஒன்றன்பின் ஒன்றாக மாற்றவும். நீங்கள் டேபிள் ஃபேன் சுத்தம் செய்யும் போது என்னை கூட பயன்படுத்தலாம்.

மேலே சொன்ன உதவி குறிப்புகளை நீங்கள் பின்பற்றுவதன் மூலம் டேபிள் பேனை எளிதாக சுத்தம் செய்து விடலாம். முக்கியமாக நீங்கள் வாரத்திற்கு ஒரு முறையாவது கண்டிப்பாக பேனை சுத்தம் செய்தால் அழுக்குகள் தங்காது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios