சாக்கு போக்கு சொல்லாதீங்க..! சரியான நேரத்தில் பக்காவா முடிச்சுடுங்க ...! 

பள்ளி மாணவர்களுக்கு பாடங்களை விரைந்து முடிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. 

தற்போது 16 ஆம் தேதி அன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த காலக்கட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது, புயல் போன்ற இயற்கை சீற்றத்தால் சற்று பாதிக்கப்படுவதை ஒவ்வொரு ஆண்டும் பார்த்து வருகிறோம். 

இதற்கிடையில் ஒரு சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப முடியாத சூழலும் ஏற்படும். பின்னர் ஒரு சில மாவட்டங்களுக்கு பள்ளி விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இதனை சமாளிக்கும் பொருட்டு விடுமுறை நாட்களை கருத்தில் கொண்டு பள்ளி செயல்படும் நாட்களில் தனியாக நேரத்தை ஒதுக்கி விடுபட்ட பாடத்தை ஆசிரியர்கள் விரைந்து முடிக்க வேண்டும் என கல்வித்துறை அதிகரித்து உள்ளது. 

அதிலும் குறிப்பாக பொதுத்தேர்வு மாணவர்களுக்கான பாட திட்டத்தை முழுமையாக முடிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.