லாரி சக்கரத்தில் மாட்டிக்கொண்டு பிரபல விளையாட்டு வீரர் பலி..! சென்னையில் பரபரப்பு..! 

பிரபல நீச்சல் வீரரான பாலகிருஷ்ணன் லாரி மோதிய விபத்தில் பலியான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை ஷெனாய் நகரில் வசித்து வருபவர் டாக்டர் பத்ரிநாத். இவருடைய மகன் பாலகிருஷ்ணன் நீச்சல் வீரர் ஆவார். இதற்கு முன்னதாக தேசிய மற்றும் மாநில அளவிலான பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றவர். கடந்த 2010 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் பாலகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டு இருந்தார்.

அப்போது இந்த போட்டியில் பங்கேற்க கூடாது என சிலர் இவருக்கு எதிராக செயல்பட்டு, பின்னர் செல்லும் வழியில் பாலகிருஷ்ணனை தாக்கியதும் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மிகப் பெரிய குற்றச்சாட்டாக இருந்தது. தற்போது அமெரிக்காவில் பணிபுரிந்து வந்த பாலகிருஷ்ணன் விடுமுறைக்காக சென்னை வந்துள்ளார். 

இந்த நிலையில் நேற்று தன்னுடைய நண்பரை பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது லாரி ஒன்றில் மோதி பின்பக்க சக்கரத்தில் மாட்டிக்கொண்டதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் பாலகிருஷ்ணன். இவருடைய உடல் தற்போது கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. நீச்சல் வீரர் பாலகிருஷ்ணனின் திடீர் மறைவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதேவேளையில் ஏற்கனவே இவருக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த விபத்தில் ஏதாவது உள்நோக்கம் இருக்குமா என்ற பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.