திருக்குறுங்குடியின் அமைந்திருக்கும் அதிசய சிலை:

இங்கு அமைந்துள்ள யாழியின் வாயின் உள்ளே ஒரு உருண்டை உள்ளது. அதை தொடலாம் அனால் எடுக்க முடியாது. இந்த சிலை ஒரே கல்லால், உருவாக்கப்பட்டது. எந்த ஒரு தொழில்நுற்ப உதவியும் இல்லாத காலத்தில், இதுபோன்ற கலைநயத்தை முன்னோர்கள் செதுக்கி இருப்பது தற்போது வரை அதிசயமாகவே பார்க்கப்படுகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்:

சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஓசோன் படலம் பற்றிய தகவல் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. ஓசோன் படலம் 20 ஆம் ஆண்டு தான் கண்டு பிடிக்கப்பட்டதாக கணித்திருக்கிறோம். ஆனால் இங்கு உள்ள பூலோக சக்கரம் என்கிற சிற்ப கலையில் ஓசோன் படலம் என்றால் என்ன, அதை எப்படி பாதுகாக்க வேண்டும் என்கிற பல தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

தஞ்சாவூர் பெரிய கோவில்:

தஞ்சை பெரிய கோவிலில், நம் நாட்டிற்கு கலாசாரம் அந்த நாட்களில் எப்படி இருந்தது என்பதை தெளிவு படுத்தும் விதமாக அமைத்துள்ளது இங்கு உள்ள சிற்பங்கள். அதாவது 500 ஆண்டுகளுக்கு முன்பு தான் அந்நிய நாட்டு வணிகர்கள் இந்தியாவிற்கு வருகை தந்தார்கள் என நம்பப்படுகிறது.

ஆனால் 1000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கோவிலில், ஐரோப்பியர் ஒருவரின் சிற்பமும் சீனர் ஒருவரின் சிற்பமும் இடம்பெற்றுள்ளது. 

மாமல்லபுரம் வான் இறை கல்:

6 மீட்டர் உயரமும், 5 மீட்டர் அகலமும் கொண்ட இந்த கல், 250 டன் இடையை கொண்டது. இந்த கல் வெறும் நான்கு அடி இடத்தில் கடந்த 1500  வருடங்களாக ஒரு மலையில் சாய்வான இடத்தில் அமைந்துள்ளது. மக்களின் பாதுகாப்பு கருதி இந்த கல்லை நகர்த்த நினைத்தவர்கள் பலருக்கும் கிடைத்தது ஏமாற்றம் மட்டுமே.

நாகப்பட்டினம் வேர்க்கும் சிலை:

அதாவது நாகப்பட்டினத்தில் இருந்து வெறும் 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைத்துள்ள சிக்கல் என்கிற ஊர், இங்கு அமர்ந்துள்ளது சிங்கார வேலன் சுப்புர மணியன் கோவில். இந்த கோவிலில் உள்ள முருகர் வதம் செய்யப்படும் நிகழ்வு நடைபெறும் போது அந்த சிலை வேர்க்கும். வதம் செய்து முடித்தவுடன் வேர்வை தானாக நிறுவிடும். இதுவரை இந்த நிகழ்வு எப்படி நடைபெறுகிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது.

நாச்சியார் கல் கருடன்;

இந்த கோவிலில் உள்ள கல் கருடனுக்கு மார்கழி மாதத்தின் போது உற்சவம் நடக்கும். அப்போது இந்த சிலையை அலங்கரித்து தூக்கி வருவார்கள். பிரகாரத்தை சுற்றி வர சுற்றி வர கருடனின் எடை அதிகரித்து கொண்டே செல்லும். நான்கு பேர் தூக்க துவங்கி, 64 பேர் தூக்கும் அளவிற்கு இதன் எடை அதிகரிக்கும். பின் மீண்டும் பிரகாரத்திற்குள் வைக்கும் போது அதன் எடை தானாக குறையும். இந்த மாற்றம் தற்போது வரை பலருக்கு புரியாத புதிராகவே உள்ளது.

ராமர் சேது பாலம்:

இந்த பாலம் பல மிதக்கும் கற்களால் செய்யப்பட்டவை என்பதை தற்போது நம்மால் பார்க்கப்படுகிறது. ராவணனின் பிடியில் அகப்பட்டிருந்த சீதையை காப்பாற்ற, அனுமன் மற்றும் வானரங்கள் கற்களில் ராமனின் பெயரை எழுதி கடலில் வீசினர். இந்த கற்கள் மிதக்க துவங்கியது என்பது வரலாறு.