Suriya Peyarchi Palangal 2022: ஜோதிடத்தின் படி, பரின் தொழில், ஆரோக்கியம், வெற்றி போன்றவற்றின் காரணியான சூரியன் கிரகங்களின் ராஜாவாகவும், செவ்வாய் கிரகங்களின் தளபதியாகவும் கருதப்படுகிறது.
ஜோதிடத்தின் படி, பரின் தொழில், ஆரோக்கியம், வெற்றி போன்றவற்றின் காரணியான சூரியன் கிரகங்களின் ராஜாவாகவும், செவ்வாய் கிரகங்களின் தளபதியாகவும் கருதப்படுகிறது.
சூரிய பெயர்ச்சி 2022:
இந்த சூரிய பெயர்ச்சி காலத்தில் சிம்ம ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். இருப்பினும், இந்த சூரியனின் ராசி மாற்றம் குறிப்பிட்ட சிலருக்கு மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.
சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுகிறார். அதன்படி, சூரியன் 2022 ஏப்ரல் 14 ஆம் தேதி செவ்வாய் ஆளும் மேஷ ராசிக்கு வந்தார்.தற்போது சூரியன், மே 15ம் தேதியன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம் மாறவுள்ளார். அங்கு அவர் ஜூன் 15 வரை இருப்பார். எனவே, இந்த சூரிய பெயர்ச்சி மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.
சூரியனின் இந்த பரிவர்த்தனையால், குறிப்பிட்ட இந்த 4 ராசிக்காரர்கள் அதிஷ்டம் உடையவர்களால் இருப்பார்கள். அப்படி எந்தெந்த ராசிகள் அதிஷ்டம் பெறுவார்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்வோம்.
மேஷம்:
மேஷம் ராசியில் பிறந்தவர்களுக்கு சூரியனின் பிரவேசம் மிகவும் சாதகமாக இருக்கும். உத்தியோகத்தில் பெரிய வெற்றியைப் பெறலாம். சொத்து வாங்கவும், விற்கவும் செய்யலாம். உத்தியோகத்தில் முன்னேறும் வாய்ப்புகள் உண்டு. வேலையில் அதிக பலன் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும்.
கடகம்:
கடகம் ராசியில் பிறந்தவர்களுக்கு சூரியனின் சஞ்சாரம் பல்வேறு பலன்களை தரும். வேலையில் அதிக முன்னேற்றம் காணப்படும். பணவரவு சாதகமாக இருக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். நிதி நிலைமையில் நிறைய முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மீனம்:
மீனம் ராசிக்காரர்களுக்கு சூரியனின் சஞ்சாரம் சிறப்பாக இருக்கும். இதுவரை நிறைவேறாத காரியங்கள் கைகூடும். திருமண யோகம் பிறக்கும். போட்டி தேர்வுகளில் வெற்றி நிச்சயம். பண வரவு அதிகரிக்கும். நிலுவையில் உள்ள பழைய வழக்குகள் தீரும். தடைகள் நீங்கி எடுத்த காரியம் நிறைவடையும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு சூரியனின் சஞ்சாரம் அதிர்ஷ்டம் பிறக்கும். நீங்கள் தொட்ட காரியம் துலங்கும். செய்யும் வேலைகளில் வெற்றி கிடைக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம், மகிழ்ச்சி ஏற்படும். பதவி உயர்வும் கிடைக்கும். வெளியூர் பயணம் செல்ல யோகம் பிறக்கும்.
