Asianet News TamilAsianet News Tamil

Lunar Eclipse 2024 : பங்குனி உத்திரம் அன்று வரும் சந்திர கிரகணம்.. இந்தியாவில் தெரியுமா.?

இந்த ஆண்டு சந்திர கிரகணம் பங்குனி உத்திரம் மற்றும் ஹோலி பண்டிகையுடன் வருவதால், சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

suriya grahanam and chandra grahanam 2024 first lunar eclipse will occur on panguni uthiram in 25 march 2024 in tamil mks
Author
First Published Mar 18, 2024, 11:57 AM IST

சூரியன், சந்திரன் மற்றும் பூமி என இவை மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும்போதுதான் கிரகணம் ஏற்படுகிறது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும் சமயத்தில், சூரியனின் நேரடிக் கதிர்கள் சந்திரன் மீது ஒளிரவிடாமல் தடுக்கப்படுகிறது. இதனால் தான் சந்திர கிரகணம் தோன்றுகிறது.

அந்தவகையில், இந்த 2024 ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மார்ச் 25ஆம் தேதி நிகழப்போகிறது. இந்த நாளில் தான் பங்குனி உத்திரம் மற்றும் ஹோலி பண்டிகை வருகிறது. இதனால் இந்த ஆண்டு சந்திர கிரகணம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. எனவே, இந்திய நேரப்படி, இந்த சந்திர கிரகணமானது, காலை 10:23 மணி முதல் மாலை 03:02 வரை நீடிக்குமாம். ஆக, இதன்
மொத்த கால அளவு 4 மணி 36 நிமிடங்கள் ஆகும். மேலும் இது 'பெனும்பிரல்' (Penumbral) சந்திர கிரகணமாக இருக்கும் என்று நாசா தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பார்க்க முடியுமா?
இந்த சந்திர கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாது. ஆனால் அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா, அயர்லாந்து, இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, பெல்ஜியம், தெற்கு நார்வே மற்றும் சுவிட்சர்லாந்தின் ஆகிய பகுதிகளில் இருந்து பார்க்க முடியும்.

இந்தியாவில் ஏன் பார்க்க முடியாது?
இந்திய நேரப்படி, இந்த சந்திர கிரகணம் பகலில் நிகழ்கிறது. இதனால் தான் அதை நம்மால் பார்க்க முடியாது. இதனால் தோஷ காலம் பொருந்தாது என்பதால் கோவில்களில் நடை சாத்தப்படாது. மேலும் அந்நாளில் பங்குனி உத்திரம் வருவதால் முருகன், சிவன் கோவில்களில் வழக்கம் போல திருவிழாக்கள் நடைபெறும். 

இதையும் படிங்க: 2024-ல் சந்திர மற்றும் சூரிய கிரகணங்கள் எப்போது தெரியுமா? தேதி, நேரம் குறித்த தகவல்கள்..!

சூரிய கிரகணம் எப்போது? 
இந்தாண்டு சூரிய கிரகணம் ஏப்ரல் 8ஆம் தேதி நிகழப்போகிறது. மேலும் இந்திய நேரப்படி இரவு நேரத்தில் நிகழும் சூரிய கிரகணம் நிகழ்வதால் நம்மால் பார்க்க முடியாது. ஆனால், மேற்கு ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பசிபிக், அட்லாண்டிக், ஆர்ட்டிக் போன்ற பகுதிகளில் சூரிய கிரகணம் தெரியும்.

இதையும் படிங்க:  Lunar Eclipse 2023 : சந்திர கிரகணத்தின் போது கர்ப்பிணிப் பெண்களே இந்த தவறுகளை செய்யாதீர்கள்..!!

இரண்டாவது சூரிய மற்றும் சந்திர கிரகணம்?
செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி புதன்கிழமை அன்று தான் இரண்டாவது சந்திர கிரகணம் நிகழப்போகிறது. இந்த கிரகணம் இந்திய நேரப்படி காலை 7.45 மணிக்கு நிகழ உள்ளதால் அதை நம்மால் பார்க்க முடியாது. ஆனால், மேற்கு ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பசிபிக், அட்லாண்டிக், ஆர்ட்டிக், பகுதிகளில் மட்டுமே சந்திர கிரகணம் தெரியும். 

அதுபோலவே, அக்டோபர் 2 ஆம் தேதி அன்று தான் இர்ண்டாம் சூரிய கிரகணம் நிகழவுள்ளது. இதுவும் இந்தியாவில் தெரியாது. ஆனால், இதை வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பசிபிக், அட்லாண்டிக், ஆர்ட்டிக் ஆகிய பகுதிகளில் மட்டும் சூரிய கிரகணம் தெரியும்.

ஆக, இந்த 2024 ஆண்டு 2 சந்திர கிரகணம், 2 சூரிய கிரகணங்கள் வந்தாலும் கூட அது இந்தியாவில் தெரியாது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Follow Us:
Download App:
  • android
  • ios