Asianet News TamilAsianet News Tamil

"இதை மட்டும்" செய்தால் ஒரு சின்ன பூச்சி கூட வீட்டிற்குள் வராது..!

நாம் பயன்படுத்தும் நம் வீட்டு பொருட்களில் கரப்பான் பூச்சு,வண்டு, எறும்பு வரும் அல்லாவா..? அவ்வாறு உணவு பொருட்களில் எந்தவித பூச்சு மற்றும் வண்டு விழாமல் இருக்க நாம் என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

superb tips to avoid entering insects in food items
Author
Chennai, First Published Mar 14, 2019, 5:32 PM IST

நாம் பயன்படுத்தும் நம் வீட்டு பொருட்களில் கரப்பான் பூச்சு, வண்டு, எறும்பு வரும் அல்லாவா..? அவ்வாறு உணவு பொருட்களில் எந்தவித பூச்சு மற்றும் வண்டு விழாமல் இருக்க நாம் என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

முதலில் சர்க்கரையில் எறும்பு வராமல் இருக்க ..

4 துண்டு கிராம்பு சேர்த்து வையுங்கள். அந்த வாசனைக்கு எறும்பு சர்க்கரையில் ஏறாது.

superb tips to avoid entering insects in food items

மிளகாய் தூளில் வண்டு வராமல் இருக்க...

உதாரணத்திற்கு ஒரு கால் கிலோ மிளகாய் தூளுடன் அரை ஸ்பூன்  உப்பை சேர்த்து விடுங்கள். இவ்வாறு செய்தால், குறைந்த பட்சம் ஆறு  மாதத்திற்கு வண்டு வராமல் இருக்கும்

கரப்பான் பூச்சி வராமல் தடுக்க பேக்கிங் சோடா

மிக குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய பேக்கிங் சோடாவை வாங்கி கொள்ளுங்கள். பொதுவாகவே பேசின் மற்றும் குளியல் அறை மற்றும் சமையல் அறையில் அதிக அளவில் கரப்பான் பூச்சு வரும். இதனை தடுக்க, சமையல் முடித்தவுடன் பேசின் நன்கு கழுவி விட்டு, இந்த பேக்கிங் சோடாவை சற்று அந்த இடத்தில் தூவி விட்டால் போதுமானது. 

கரப்பான் பூச்சு வரவே வராது. மேலும் பேக்கிங் பவுடரும் தூவி சிறிது நேரம் கழித்து சுடு தண்ணீரை ஊற்றவும். இவ்வாறு செய்தால் கரப்பான் பூச்சி வராது இன்னொன்று, பைப்பில் உள்ள அடைப்புகள் நீங்கும்.

எலி வராமல் தடுக்க..! 

புதினா இலையை எலி வரக்கூடிய பீடத்தில் தூவி விட்டால் எலி வரவே வராது. 

superb tips to avoid entering insects in food items

எட்டு கால் பூச்சி வராமல் தடுக்க செய்ய வேண்டியது இதுதான்..!

நம் பயன்படுத்தும் புதிய சோப்பு கவர் மற்றும் perfumes பாட்டிலை ஆடை வைக்கும் அறையில் வைத்தால் எட்டு கால் பூச்சு வராது. அரிசியில்  வண்டு வராமல் இருக்க வேப்பிலை இலையை அரிசியில் போட்டு  வைத்தால் வண்டு வரவே வராது. அல்லாது வசம்பு 2  பீஸை எடுத்து அரிசியில் போட்டு வைத்தால் வண்டு வராது.

பல்லி வராமல் இருக்க..!

ஒரு சின்ன கவரில் அல்லது பிளாஸ்டிக் பாக்கெட்டில் மண்ணை வைத்து அதில் வெங்காய செடியை வளர விட்டு, நம் வீட்டிலேயே வளர்க்கும் போது, பல்லி வராது. நம் வீட்டில் கண்ட பூச்சி வண்டு என எதுவும் வராமல் பாதுகாப்பாக இருக்க மேற்குறிப்பிட்ட சில விஷயங்களை மறக்காமல் முயற்சி செய்து பாருங்கள். உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். 

Follow Us:
Download App:
  • android
  • ios